தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்​தில் ஒருசில மாவட்​டங்​களில் இன்​றும் நாளை​யும் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

ஆந்​திர கடலோரப் பகு​தி​களை ஒட்​டிய வங்​கக்​கடல் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (செப்​.9) ஒருசில இடங்​களி​லும், நாளை பெரும்​பாலான இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் லேசான மழை பெய்​யக் கூடும். மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்​தில் பலத்த காற்​றும் வீசக்​கூடும்.

குறிப்​பாக கோவை மாவட்ட மலைப் ​பகு​தி​கள், நீல​கிரி, தேனி, திண்​டுக்​கல், மதுரை, சிவகங்​கை, கள்​ளக்​குறிச்​சி, விழுப்​புரம், திரு​வண்​ணா​மலை, செங்​கல்​பட்டு மற்​றும் காஞ்​சிபுரம் மாவட்​டங்​களி​லும், நாளை வேலூர், ராணிப்​பேட்​டை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திரு​வண்​ணா​மலை, விழுப்​புரம், கள்​ளக்​குறிச்​சி, கடலூர், அரியலூர், மயி​லாடு​துறை, நாகப்​பட்​டினம், தஞ்​சாவூர், திரு​வாரூர், புதுக்​கோட்​டை, சிவகங்​கை, மதுரை, திண்​டுக்​கல், தேனி மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.