சென்னை: ஒசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நாளை கலந்துகொள்ளவும், நாளை மறுநாள், கிருஷ்ணகிரியில் மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், இரண்டு நாள் பயணமாக நாளை காலை கிருஷ்ணகிரி புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக நாளை (வியாழக்கிழமை) கிருஷ்ணகரி மாவட்டத்திற்கு செல்கிறார். காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓசூர் தனேஜா விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் சிறப்பான […]
