ஓட்டல் சமையல் தொழிலாளிக்கு ரூ.46 கோடி வருமான வரி நோட்டீஸ்

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்ட நெடுஞ்​சாலை​யில் உள்ள ஒரு உணவகத்​தில் சமையல​ராக பணிபுரிந்து வருபவர் ரவிந்​தர் சிங் சவு​கான் (30). இவருக்கு கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி வரு​மான வரித் துறையி​லிருந்து ஒரு நோட்​டீஸ் வந்​துள்​ளது. அவருக்கோ அவரது மனை​விக்கோ ஆங்​கிலம் தெரி​யாது என்​ப​தால், அந்த நோட்​டீஸை புறக்​கணித்​து​விட்​டனர்.

பின்​னர் கடந்த ஜூலை 25-ம் தேதி 2-வது முறை​யாக நோட்​டீஸ் வந்​துள்​ளது. இதையடுத்​து, ஆங்​கிலம் தெரிந்​தவர்​களின் உதவியை நாடி உள்​ளார். அப்​போது, வரு​மான வரித் துறை​யின் குவாலியர் கிளை​யில் இருந்து வந்த அந்த நோட்​டீஸில் 2020-21 நிதி​யாண்​டுக்கு வரு​மான வரி பாக்கி ரூ.46 கோடியை செலுத்த வேண்​டும் என கூறப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் வழக்​கறிஞர் உதவி​யுடன் காவல் நிலை​யத்​தில் புகார் செய்​துள்​ளார்.

இதுகுறித்து சவு​கானின் வழக்​கறிஞர் பிரது​மான் சிங் பதோரியா கூறும்​போது, “கடந்த 2019-ம் ஆண்டு குவாலியர் சுங்​கச் சாவடி அருகே உள்ள ஒரு உணவகத்​தில் உதவி​யாள​ராக சவு​கான் பணிபுரிந்​துள்​ளார்.

அப்​போது அங்கு கண்​காணிப்​பாள​ராக பணிபுரிந்​த ஒருவர், பி.எப்​. கணக்கு தொடங்​கு​வ​தாகக் கூறி சவு​கானின் வங்​கிக் கணக்கு, ஆதார் விவரத்தை பெற்​றுள்​ளார்.

இந்த ஆவணங்​களைப் பயன்​படுத்தி யாரோ வங்​கிக் கணக்கு தொடங்கி அதிக அளவில் பணப்​பரிவர்த்​தனை செய்​துள்​ளார். இதுகுறித்து காவல் நிலை​யத்​தி்ல் புகார் செய்​துள்​ளோம். இந்த குற்​றம் டெல்​லி​யில் நடந்​துள்​ள​தாக அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர். எனவே, டெல்​லி​யில் புகார் செய்ய வேண்​டி உள்​ளது’’ என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.