புதுடெல்லி,
துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்..இவரை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி, 300 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது,2025 துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அவரது வாழ்க்கை எப்போதும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.அவர் நமது அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தி, நாடாளுமன்ற விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணைத் தலைவராக இருப்பார் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்..
அமித் ஷா வாழ்த்துஅமித் ஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,”நாட்டின் துனை ஜனதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்.சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து எழுந்த ஒரு தலைவராக உங்கள் நுண்ணறிவும், நிர்வாகத்தைப் பற்றிய ஆழமான அறிவும், நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சிறந்ததை வெளிப்படுத்தி ஒதுக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதில் உதவும் என்று உறுதியாக நம்புகிறேன்.அவையின் புனிதத்தின் பாதுகாவலராக உங்கள் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.