ஆவலஹள்ளி,
பெங்களூரு ஆவலஹள்ளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சீமசந்திராவில் உள்ள கே.ஆர்.டிபென்ஸ் லே-அவுட் அருகே ஒரு வீட்டில் தாய் மற்றும் அவரது மகள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களின் வீட்டின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக பார்த்தனர்.
அப்போது அங்கு வாலிபர் ஒருவர் கையில் மண்வெட்டியுடன், உடலில் ஆடை அணியாமல் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தார். பின்பு அவர் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததுடன், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை சேதப்படுத்தினார்.
மேலும் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைய முயன்றார். இதனை கண்ட தாய், மகள் இருவரும் பயங்கரமாக அலறினர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து ஆவலஹள்ளி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசாா் விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்டவர் ஜெஸ்ஸி என தெரிய வந்தது. மேலும் ஆவலஹள்ளி போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.