இந்தியாவை ஆளும் எஸ்யூவிகள்: சாலைகளை கலக்கும் புதிய ராஜாக்கள்

Top Selling SUVs: நீங்கள் ஒரு சக்திவாய்ந்த மற்றும் பிரபலமான SUV காரைத் தேடுகிறீர்களானால் இந்த செய்தியை கட்டியம் படிக்கவும். குறிப்பாக நீங்கள் தேடும் காரில் சக்திவாய்ந்த அம்சங்கள் மற்றும் சிறப்பான தொழில்நுட்பத்தின் கலவையுடன் இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கானது.

Add Zee News as a Preferred Source

Hyundai Creta – ஹூண்டாய் க்ரெட்டா

ஹூண்டாய் க்ரெட்டா விற்பனை பட்டியலில் தொடர்ந்து 15,924 யூனிட்கள் விற்பனையுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 16,762 யூனிட்கள் விற்பனையாகியிருந்தது, இது 5% சரிவைப் பதிவு செய்துள்ளது. மொத்த விற்பனை 14,004 யூனிட்களுடன் டாடா நெக்ஸான் பிரெஸ்ஸாவை முந்தி இரண்டாவது இடத்தைப் பிடித்தள்ளது.

Maruti Brezza – மாருதி பிரெஸ்ஸா

ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டில் 13,622 யூனிட்கள் விற்பனையுடன், மாருதி பிரெஸ்ஸா மூன்றாவது சிறந்த விற்பனையான SUVகளில் ஒன்றாக இருக்கிறது. இருப்பினும், இந்த சப்காம்பாக்ட் SUV ஆண்டுக்கு ஆண்டு 29% குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது.

Maruti Fronx – மாருதி சுசுகி ஃபிராங்க்ஸ்

மாருதி சுசுகி ஃபிராங்க்ஸ் 12,422 யூனிட்கள் விற்பனை செய்து நான்காவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. அதன் பெரிய போட்டியாளரான டாடா பஞ்ச் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 15,643 யூனிட்கள் விற்பனையான நிலையில், தற்போது இந்த ஆண்டு 10,704 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது.

Mahindra Scorpio – மஹிந்திரா ஸ்கார்பியோ

மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டில் 13,787 யூனிட்கள் விற்பனை செய்த நிலையில், தற்போது 9,840 யூனிட்கள் விற்பனையாகி மூன்றாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு சரிந்தது.

Toyota Kirloskar – டொயோட்டா கிர்லோஸ்கர் 

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டில் 9,100 ஹைரைடர் எஸ்யூவிகளை விற்பனை செய்தது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 6,534 யூனிட்களாக இருந்தது. இந்த எஸ்யூவியின் விற்பனை 39% மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Hyundai Venue – ஹூண்டாய் வென்யூ 

ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சோனெட் சப்காம்பாக்ட் எஸ்யூவிகள் முறையே 8,109 யூனிட்கள் மற்றும் 7,741 யூனிட்கள் விற்பனையுடன் எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Mahindra Thar – மஹிந்திரா தார்

இதற்கிடையில், மஹிந்திரா தார் 64% ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்து மொத்த விற்பனை 6,997 யூனிட்களாக இருந்தது. இருப்பினும், அதன் மாதாந்திர விற்பனை வெகுவாகக் குறைந்து, கடந்த ஜூலை 2025 ஆண் ஆண்டில் ஏழாவது இடத்திலிருந்து பத்தாவது இடத்திற்குச் சரிந்தள்ளது.

About the Author


Vijaya Lakshmi

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.