சென்னை: எடப்பாடி பழனிசாமி இன்றுமுதல் முகமூடி பழனிசாமி என அழைக்கப்படுவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலாய்த்து உள்ளார். இதற்கு அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி “முகத்தை துடைப்பதை, முகத்தை மூடிக்கொண்டு செல்வதாக தவறான கதையை பரப்பப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பும்போது, முகத்தில் கர்ச்சிப் போட்டு மறைத்திருந்தார். இதுதொடர்பான படம், […]
