சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான (ICC) மரபுப்படி, ஆசிய கோப்பை தொடரின் நடுவே சர்வதேச டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசைகளை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியில் சேர்ந்த மூன்று பேட்ஸ்மேன்கள் டாப் 10 புள்ளியாளர்களில் இடம்பிடித்து அசத்தி உள்ளனர்.
Add Zee News as a Preferred Source
அபிஷேக் சர்மா முதல் இடம்
இந்தியாவின் அதிரடி துவக்கத்தகவன ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 884 புள்ளிகளுடன் முதன்மை இடத்தை நிலைநாட்டினார். இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அணியில் சிறந்த 144 ரன் குவித்த பிலிப் சால்ட், மூன்றாவது இடத்தில் அதே போட்டியில் 80 ரன்கள் அடித்த ஜாஸ் பட்லர் உள்ளனர்.
நான்காவது இடத்தில் இந்திய இளம் வீரர் திலக் வர்மா, ஐந்தாவது இட்த்தில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், ஆறாவது இடத்தில் இலங்கை வீரர் பதும் நிசாங்காவும் பிடித்துள்ளனர். ஏழாவது இடத்தில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 747 புள்ளிகளுடன் இடம் பெற்றுள்ளார்.
வருண் சக்கரவர்த்தி முதல் இடம்
பந்துவீச்சு துறையில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் வருண் சக்கரவர்த்தி 733 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தி அசத்தி இருக்கிறார். இவரை தொடர்ந்து மற்ற அணி வீரர்கள் உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் வருண் சக்கரவர்த்திக்கு பிறகு 7வது இடத்தில் ரவி பிஸ்னோய் உள்ளார். டாப் 10க்குள் இருந்த அர்ஷ்தீப் சிங் 14வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா முதல் இடம்
ஆல்-ரவுண்டர் துறையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா 237 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார். இவரை அடுத்த டாப் 10ல் இந்திய வீரர்கள் யாரும் இல்லை. 12வது இடத்தில் அக்சர் படேல் 163 புள்ளிகளுடன் உள்ளார்.
டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் பேட்டிங், பந்து வீச்சு மற்றும் ஆல்-ரவுட்ண்டர் என அனைத்திலுமே முதல் இடத்தில் உள்ளனர். குறிப்பாக பேட்டிங்கில் டாப் 10ல் 3 வீரர்கள் இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji