புரோ கபடி லீக்: தொடர்ந்து 6-வது வெற்றியை பெற்ற டெல்லி

ஜெய்ப்பூர்,

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 37-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான தபாங் டெல்லி, தெலுங்கு டைட்டன்சை எதிர்கொண்டது. இதில் முதல் பாதியில் 9-14 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த டெல்லி அணி பிற்பாதியில் எழுச்சி பெற்று 33-29 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்து தொடர்ந்து 6-வது வெற்றியை பெற்றது. ெலுங்கு அணிக்கு இது 5-வது தோல்வியாகும்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அரியானா ஸ்டீலர்ஸ் 43-32 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்சை தோற்கடித்து 4-வது வெற்றியை பெற்றது.

இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8 மணி), யு மும்பா- புனேரி பால்டன் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.