Asia Cup 2025 Super 4 Group, India vs Pakistan: ஆசிய கோப்பை 2025 தொடர் கடந்த செப். 9ஆம் தேதி தொடங்கியது. நேற்றோடு குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. இன்று முதல் சூப்பர் 4 சுற்று தொடங்குகிறது.
Add Zee News as a Preferred Source
Asia Cup 2025: ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டிகள்
ஏ பிரிவில் இந்திய அணி 3 போட்டிகளிலும் வென்று முதலிடத்தை பிடித்தது. பாகிஸ்தான் அணி இந்தியா உடன் மட்டும் தோற்று, மற்ற இரண்டு போட்டிகளை வென்று 2வது இடத்தை பிடித்தது. ஐக்கிய அரபு அமீரகம் 1 வெற்றியை மட்டும் பதிவு செய்தது. ஓமன் மூன்றிலும் தோற்றது. இந்தியா, பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றன.
பி பிரிவில் இலங்கை அணி 3 போட்டிகளிலும் வென்று முதலிடத்தை பிடித்தது. பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக வங்கதேசம் அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியதால் 4 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்தது. ஆப்கானிஸ்தான் ஹாங் காங் உடன் மட்டுமே வெற்றி பெற்று பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஹாங் காங் மூன்றிலும் தோற்றது. இலங்கை, வங்கதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
இந்தியா (A1), பாகிஸ்தான் (A2), இலங்கை (B1), வங்கதேசம் (B2) அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோத உள்ளன, இதில் ஒவ்வொரு அணியும் மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும். சூப்பர் 4 சுற்றின் முடிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளே செப். 28ஆம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். நாளை (செப். 21) பாகிஸ்தான் அணியுடனும், செப். 24 அன்று வங்கதேசம் அணியுடனும், செப். 26 அன்று இலங்கை அணியுடனும் இந்திய அணி மோத உள்ளது.
Asia Cup 2025: வெளியேறும் அர்ஷ்தீப், ஹர்ஷித்
நேற்றைய ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இரண்டு பெரிய மாற்றங்களை செய்திருந்தது. பும்ரா, வருண் சக்ரவர்த்தி இருவருக்கும் பதில் அர்ஷ்தீப சிங் மற்றும் ஹர்ஷித் ராணா இருவருக்கும் இந்தியா வாய்ப்பளிப்பது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் பும்ரா, வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. இதனால், அர்ஷ்தீப் மற்றும் ஹர்ஷித் ராணா வெளியேறுவார்கள்.
Asia Cup 2025: அக்சர் பட்டேல் விளையாடுவாரா?
ஆனால் அதே நேரத்தில், அக்சர் பட்டேலுக்கு நேற்றைய ஓமன் போட்டியில் தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஒருவேளை அக்சர் பட்டேலுக்கு பதில் யாரை சேர்ப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. அப்படியிருந்தால் நிச்சயம், ரிங்கு சிங்கிற்குதான் வாய்ப்பு கிடைக்கும். ஷிவம் தூபே, ஹர்திக் பாண்டியா, பும்ரா என மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள்; வருண் மற்றும் குல்தீப் என இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் என 5 பௌலர்கள் இருப்பார்கள். தேவைப்பட்டால் அபிஷேக், திலக் வர்மா ஓரிரு ஓவர்களை வீசலாம். பேட்டிங்கும் நம்பர் 8 வரை இருக்கும்.
அக்சர் பட்டேல் குறித்து இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திலீப், “நான் அக்சரைப் பார்த்தேன்; அவர் இப்போது நன்றாக இருக்கிறார்” என கூறியிருந்தார். எனவே அக்சர் பட்டேல் விளையாடுவாரா, இல்லையா என்பது நாளையே தெரியும். அதேநேரத்தில், பும்ரா, வருண் அணிக்கு திரும்புவது உறுதி எனலாம்.
Asia Cup 2025: இந்திய அணி பிளேயிங் லெவன் கணிப்பு
சுப்மான் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், ஷிவம் தூபே, அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா