மதுரை: நடிகர் விஜயின் கட்சியான தவெகவின் மதுரையில் நடைபெற்ற 2வது மாநில மாநாட்டுக்கு வந்த 1.30 லட்சம் வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாததால், அரசு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயருத்ரன் என்பவர், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை மாவட்டம் கப்பலூர் முதல் உத்தங்குடி வரையிலான 31.2 கிமீ தூர சாலையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் டோல் […]
