Robo Shankar: “கடந்த வாரம்கூட ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றோம், ஆனால்'' – கண்ணீர் மல்கிய ராமர்

நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2023-ம் ஆண்டு, இவருக்கு மஞ்சள் காமாலை (Jaundice) நோய் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த இவர் உடல்நலக் குறைவால், நேற்று முன்தினம் காலை சென்னையில் உள்ள பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று (செப். 18) இரவு உயிரிழந்தார்.

ரோபோ சங்கர்
ரோபோ சங்கர்

கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ ஷங்கர்.

இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமடைந்தார்.

தனுஷின் ‘மாரி’, விஜய்யின் ‘புலி’, சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் மனதை ஈர்த்திருந்தார்.

அவரின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் அவருடன் பயணித்த நகைச்சுவை நடிகர் ராமர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராமர், “வடிவேல் பாலாஜியின் இறப்புக்குப் பின் எங்களுக்கு இது மிகப்பெரிய இழப்பு. சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பிருந்தே எனக்கு ரோபோ சங்கர் பழக்கம்.”

ரோபோ சங்கர்
ரோபோ சங்கர்

25 வருடங்களாக எனக்கு சிறந்த, நெருங்கிய நண்பர். அவரது இழப்பை ஏற்கவே முடியவில்லை. கடந்த வாரம்கூட ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாகப் பங்கேற்றோம். திடீரென ஏதோ உடல்நலக்குறைபாடு என்றனர். ஆனால் இப்படியொரு செய்தியைக் கேட்போம் என நினைக்கவில்லை. எங்களோடு எப்போதும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார் அவர். மிஸ் யூ ரோபோ” என்று கண்ணீர் மல்கப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.