ஆந்திராவில் வெள்ளத்தில் 4 பேர் உயிரிழப்பு: தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ராயசோட்டி: ஆந்​திர மாநிலம், அன்​னமைய்யா மாவட்​டம், ராயசோட்​டி​யில் பெய்த கன மழை காரண​மாக வெள்​ளிக்​கிழமை இரவு 8 மணி​யள​வில் எஸ்​.எம். நகரில் கால்​வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர் மழை காரண​மாக பலரது வீடு​களில் மழை நீரும் புகுந்​தது. இதனால் பாதிக்​கப்​பட்ட ஷேக் முன்னி (28) எனும் பெண் தனது 4 வயது மகனுடன் வீட்​டில் இருந்​தார். அப்​போது மழை வெள்​ளத்​தில் மகன் அடித்துச் செல்​வதை தடுக்க அவரும் வெள்​ளத்​தில் இறங்​கி​னார். இதனால் இரு​வரும் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டனர். இதனை பார்த்த பக்​கத்து வீட்​டுக்​கார​ரான கணேஷ் (25) என்​பவர் இவர்​கள் இரு​வரை​யும் காப்​பாற்ற வெள்​ளத்​தில் இறங்​கி​னார். ஆனால் அவர் மின்​சா​ரம் பாய்ந்து உயி​ரிழந்​தார். பின்னர், நள்​ளிரவு நேரத்​தில் 3 பேருமே சடல​மாக மீட்​கப்​பட்​டனர்.

இதே​போன்​று, ராயசோட்​டி​யில் வெள்​ளிக்​கிழமை இரவு ட்யூஷனுக்கு போய் விட்டு வீட்​டிற்கு திரும்பும் வழியில் சிறுமி ஒருவர் வெள்​ளத்​தில் சிக்கி உயிரிழந்தார். 4 பேரின் உடல்​களும் நேற்று பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன. இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு ஆந்​திர அரசு தலா ரூ.5 லட்​சம் நிதி உதவி அறி​வித்​துள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.