நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு: கிராந்தி குமார் பாடி தகவல்

சென்னை: ​நான் முதல்​வன் திட்​டம் மூலம் ஏராள​மான மாணவர்​கள் வேலை​வாய்ப்பை பெற்று வரு​வ​தாக தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழக மேலாண்மை இயக்​குநர் கிராந்தி குமார் பாடி தெரி​வித்​தார். தேசிய தொழிற் கல்வி பயிற்சி குழு​மம், மத்​திய திறன் மேம்​பாடு தொழில் முனை​வோர் அமைச்​சகம் மற்​றும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்டு கழகத்​துடன் இணைந்து தென் மண்டல இளை​யோ​ருக்​கான ஆளு​மைத்​திறன் மேம்​பாடு மற்றும் தொழில் விழிப்​புணர்வு குறித்த கருத்​தரங்​கம் சென்​னை​யில் நேற்று நடைபெற்றது.

இதில் தேசிய தொழிற்​கல்வி மற்​றும் பயிற்சி குழு​மத்​தின் செயற்​குழு உறுப்​பினர் வனிதா அகர்​வால், மத்​திய திறன் மேம்​பாடு மற்றும் தொழில் முனை​வோர் துறை​யின் அமைச்​சர்  ஜெயந்த் சவுத்​ரி, தமிழக தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலர் வீர ராகவ ராவ், தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழக மேலாண்மை இயக்​குநர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் கலந்​து ​கொண்​டனர்.

பின்னர், தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகத்​தின் மேலாண்மை இயக்​குநர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் சிறப்​பாக செயல்​பட்​டு​வரும் நான் முதல்​வன் திட்​டம் பற்றி கருத்​தரங்​கில் எடுத்​துரைத்​தோம். அனை​வரும் நமது செயல் திட்​டங்​களை வரவேற்று பாராட்​டி​உள்​ளனர்.

ஒவ்​வொரு மாநிலத்​துக்​கும் ஒரு தனித்​திறன் உள்​ளது. சிறப்​பான செயல்​திட்​டங்​களை ஒரு மாநிலத்தை பார்த்து இன்​னொரு மாநிலம் கற்​றுக்​கொள்​வதற்கு இந்த கருத்​தரங்​கம் மிக​வும் உதவி​யாக உள்​ளது. நான் முதல்​வன் திட்​டம் மூலம் நிறைய போட்​டித் தேர்வு மாணவர்​களை நாம் தயார்​படுத்தி வரு​கிறோம். அதில் ஏராளமான வேலை​வாய்ப்பை பெற்று வரு​கின்​றனர். வரும் காலங்​களில் இதை மேலும் அதிகப்​படுத்​து​வோம் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.