டெல்லி: சுமார் 2ஆயிரம் கிலோ மீட்டர் இலக்கை தாக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ள அக்னி ஏவுகணை, ரயிலில் இருந்து செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய அரசு ஏற்கனவே அக்னி உள்பட ஏராளமான ஏவுகணைகளை தயாரித்து, அதை வெற்றிகரமாக இயக்கியும் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், 2,000 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறன் கொண்ட இரண்டாம் தலைமுறை அக்னி-பிரைம் […]