இந்தியாவில் வெற்றிகரமாக பத்தாயிரம் G 310 RR பைக்குகள் விற்பனை செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் சிறப்பு லிமிடெட் எடிசன் ரூ.2.99 லட்சத்தில் வெறும் 310 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்க உள்ளது.
புதிய ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பின் காரணமாக வழக்கமான ஜி 310 ஆர்ஆர் மாடல் ரூ.2.81 லட்சத்தில் கிடைக்கின்ற நிலையில் சிறப்பு லிமிடெட் எடிசன் விலை ரூ.18,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது.
காஸ்மிக் கருப்பு மற்றும் போலார் வெள்ளை என இரு நிறங்களை பெற்றுள்ள சிறப்பு எடிசனின் கூடுதல் விலைக்கு காரணம், கொடுக்கப்பட்டுள்ள பாடி ஸ்டிக்கரிங் வழக்கமான மாடலை விட தனித்துவமான அடையாளத்தை வெளிப்படுத்துகின்ற S 1000 RR பைக்கிலிருந்து பெறப்பட்டதை போல அமைந்திருக்கின்ற நிலையில் 17 அங்குல அலாய் வீலில் டிகெல் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்தப்படியாக டேங்கின் மேற்பகுதியில் ஒவ்வொரு வாகனத்துக்கும் எண் 1/310, 2/310 என்ற வரிசையில் பேட்ஜிங் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
மற்றபடி, வழக்கமான மாடலை போல அனைத்து மெக்கானிக்கல் மற்றும் என்ஜின் சார்ந்த அம்சங்களை பெற்றுள்ளது. OBD-2B விதிமுறைகளுக்கு உட்பட்டு ரிவர்ஸ் இன்கிளைன்டு DOHC 313சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் 9,800 rpm-ல் 38 PS பவர் மற்றும் 7,900 rpm-ல் 29 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற உள்ளது.
Track, Sport, Urban, மற்றும் Rain என நான்கு விதமான ரைடிங் மோடுகளுடன் 5 அங்குல TFT கிளஸ்ட்டரை பெற்றதாக விளங்குகின்றது.