சென்னை: தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 26 புதிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்படி, தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் 26 புதிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கள்ளக்குறிச்சியில் ரூ. 4.01 கோடியில் மாவட்ட மைய நூலகங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பள்ளிக்கல்வித் துறையின் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் 26 நூல்களையும் […]
