கரூர் துயரம்: “எப்படி தேற்றுவது தெரியவில்லை, கண்ணீர் முட்டுகிறது'' – சினிமா பிரபலங்கள் இரங்கல்

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 12 பேர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களைக் காண தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனையில் இருக்கிறார்.

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

இந்த சம்பவத்துக்கு இந்திய அரசியல் தலைவர்கள் முதல் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக சினிமா பிரபலங்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ், “கோரக் காட்சிகள் நம்மை கதிகலங்க வைக்கிறது. யாருக்கு ஆறுதல் சொல்வது எப்படித் தேற்றுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன்.

கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் பார்த்திபன்,

“கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்கு யார் எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை.

இன்னும் சிகிச்சையில் இருக்கும் 58 பேரும் விரைந்து குணமடைய அனைவரும் வேண்டிக் கொள்வோம்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் விஷ்ணு விஷால்,

“கரூர் செய்தியைக் கேட்டு வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன். கரூரில் நடந்த துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.

துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ், “கரூர் பெருந்துயரம் நெஞ்சை அடைக்கிறது. இந்த இரவையும் இந்த பேரிழப்பையும் எப்படி கடப்பது, கண்ணீர் முட்டுகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.