டெல்லி: தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய மாறுதல் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்மூலம், தபால் வாக்குகளை எண்ணும் செயல்முறையை தேர்தல் ஆணையம் மேலும் எளிமைப்படுத்துகிறது. தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான கடைசி இரண்டு சுற்று வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் கடந்த சில ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து […]
