India vs Srilanka: ஆசிய கோப்பை 2025 தொடரின் கடைசி சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இந்த போட்டியின் போது, இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த காயம் ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அவரது காயம் குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Add Zee News as a Preferred Source
Unbeaten run in the #AsiaCup2025 continues
On to the #Final
Scorecard https://t.co/FSv1q3IqCa#TeamIndia | #Super4 | #INDvSL pic.twitter.com/cNacwS1jJh
— BCCI (@BCCI) September 26, 2025
இந்தியா – இலங்கை போட்டியில் நடந்தது என்ன?
துபாயில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டியில், இந்திய அணியின் பந்துவீச்சை ஹர்திக் பாண்டியா தொடங்கினார். தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே, இலங்கை வீரர் குசால் மெண்டிஸை வீழ்த்தி, அணிக்கு ஒரு சிறப்பான தொடக்கத்தை அளித்தார். ஆனால், அந்த ஓவர் முடிந்த உடனேயே தனது இடது தொடை பகுதியை பிடித்தவாறு வலியால் அவதிப்பட்டார் ஹர்திக் பாண்டியா. உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறிய அவர், அதன் பிறகு பீல்டிங் செய்ய திரும்பவில்லை. இது அவருக்கு தொடைத் தசையில் hamstring காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
போட்டி முடிந்த பின்பு பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “அணியில் சில வீரர்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது” என்று பொதுவாக குறிப்பிட்டார். பின்பு இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னி மார்கல் இது குறித்து விரிவாக பேசினார். “ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்டது தசைப்பிடிப்புதான், வேறு தீவிரமான காயம் எதுவும் இல்லை. துபாயின் கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக இது ஏற்பட்டுள்ளது. அவர் இன்று இரவு மற்றும் நாளை காலை மருத்துவ குழுவால் கண்காணிக்கப்படுவார். அதன்பிறகு, இறுதி போட்டியில் அவர் விளையாடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
இந்திய அணிக்கு பெரும் நிம்மதி
இது தசைப்பிடிப்பு தான், பெரிய காயம் இல்லை என்ற செய்தி இந்திய அணிக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. ஏனெனில், ஒருவேளை இது தொடை தசை காயமாக இருந்திருந்தால், அவர் இறுதி போட்டியில் விளையாடுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகியிருக்கும். ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அணிக்கு சமநிலையை கொடுக்கும் ஒரு முக்கிய வீரர் என்பதால், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் அவரது பங்கு மிக அவசியமானது.
ஹர்திக் பாண்டியா மட்டுமல்லாமல், இளம் வீரர் அபிஷேக் ஷர்மாவும் இதே போட்டியில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, ஹர்திக் பாண்டியா இறுதி போட்டிக்கு தயாராகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணிக்கு ஒரு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. கடைசியாக 2023 உலக கோப்பையில் இதே போன்று ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். அப்போது இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தது.
Abhishek is fine, we will assess Hardik pandya overnight says Morne Morkel during Post Match PC. #AsiaCup2025 #InjuryUpdate pic.twitter.com/vWoziD1hvI
— Ankan Kar (@AnkanKar) September 26, 2025
About the Author
RK Spark