பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆயுள் தண்டனையை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீடு

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்​களு​டன் நெருக்​க​மாக இருக்​கும் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வீடியோக்​கள் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி​யாகி பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தின. இதையடுத்து அவரது வீட்டு பணிப்​பெண், மஜத கிராம பஞ்​சா​யத்து தலைவி உட்பட 4 பெண்​கள் பிரஜ்வலுக்கு எதி​ராக புகார் அளித்​தனர். அதன்​பேரில் அவர் மீது 5 பாலியல் வன்​கொடுமை வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. பிரஜ்வல் ரேவண்ணாவும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த எம்.பி, எம்எல்ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பளித்த்தது. ‘‘இவ்​வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்​கொடுமை குற்​றங்​கள் அரசு தரப்​பால் சந்​தேகத்​துக்​கிட​மின்றி நிரூபிக்கப்​பட்​டுள்​ளன. அதற்​கான சாட்​சி​யங்​களும், ஆவணங்​களும் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. அதன் அடிப்​படை​யில் பிரஜ்வல் ரேவண்ணா குற்​ற​வாளி என்​பது உறு​தி​யாகி​யுள்​ளது.” என நீதிபதி சந்​தோஷ் கஜனன் பட் தெரிவித்தார்.

இதையடுத்து, ஆகஸ்ட் 2-ம் தேதி தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டன. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் சாகும் வரை அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் நீதிபதி சந்தோஷ் பட் அறிவித்தார். இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு பரப்பன அக்​ரஹாரா சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், “பாதிக்கப்பட்டவரின் புகாருக்கும் சாட்சியத்துக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. பாதிக்கப்பட்டவரை புகார் அளிக்குமாறு காவல்துறையினர் கட்டாயப்படுத்தி உள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு படுக்கையில் காணப்பட்டதாகக் கூறப்படும் கறை ஆதாரங்கள் நம்பகத்தன்மையை கொண்டிருக்கவில்லை. எனவே, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.