‘சி.எம். சார்’ என் மீது கை வையுங்கள்; தொண்டர்களை விட்டுவிடுங்கள் – வீடியோ வெளியிட்டு விஜய் ஆவேசம்

சென்னை: ​விரை​வில் அனைத்து உண்​மை​களும் வெளியே வரும். ‘சி.எம். சார்’ பழி வாங்க வேண்​டும் என்​றால் என் மீது கை வையுங்​கள்; தொண்​டர்​களை விட்​டு​விடுங்​கள் என்று வீடியோ வெளி​யிட்​டுள்ளார் தவெக தலை​வர் விஜய்.

கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தின் போது ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவம் குறித்து விஜய் மவுனமாக இருந்ததால், அவருக்கு பல்​வேறு தரப்​பில் இருந்து ஆதர​வும், எதிர்ப்​பு​களும் குவிந்​தன. இந்​நிலை​யில், தவெக தலை​வர் விஜய் 2 நாட்​களுக்​குப் பிறகு கரூர் சம்​பவம் தொடர்​பாக நேற்று வீடியோ வெளி​யிட்​டுள்​ளார். அவர் பேசி​யிருப்​ப​தாவது: என் வாழ்க்​கை​யில் இது​போன்ற வலி நிறைந்த தருணத்தை நான் எதிர்​கொண்​டது கிடை​யாது. சுற்​றுப் பயணத்​தில் என்​னை மக்​கள் பார்க்க வரு​வதற்கு, அவர்​கள் என் மீது வைத்​துள்ள அன்​பும், பாச​மும்​தான் காரணம். அந்த அன்​புக்​கும், பாசத்​துக்​கும் நான் எப்​போதும் கடமைப்​பட்​டிருக்​கிறேன்.

அதனால்​தான் இந்த சுற்​றுப் பயணத்​தில் மற்ற எல்லா விஷ​யங்​களை​யும் தாண்​டி, அரசி​யல் காரணங்​களை ஒதுக்கி வைத்​து​விட்​டு, மக்​கள் பாது​காப்​புக்​கான இடங்​களை தேர்ந்​தெடுத்​து, அந்த இடங்​களுக்கு அனு​மதி தர கோரி காவல் துறை​யிடம் கேட்​போம். ஆனால், நடக்​கக் கூடாதது நடந்​து​விட்​டது. நானும் மனிதன்​தான். அந்த நேரத்​தில், அத்​தனை பேர் பாதிக்​கப்​பட்​டிருக்​கும்​போது, அந்த ஊரை விட்டு என்​னால் எப்​படி கிளம்​பிவர முடி​யும்? நான் திரும்ப அங்கே போனால், அதை காரணம் காட்​டி, பதற்​ற​மான நிலை​யில், அங்கு வேறு சில அசம்​பா​விதங்​கள் எது​வும் நடந்​து​விடக் கூடாது என்​ப​தற்​காகத்​தான் நான் அங்கு மீண்​டும் செல்​ல​வில்​லை.

இந்த நேரத்​தில் சொந்​தங்​களை இழந்து தவிக்​கும் அத்​தனை குடும்​பங்​களுக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கல்​கள். எனக்​குத் தெரி​யும், என்ன சொன்​னாலும் இது ஈடா​காது. மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்​று​வரும் அனை​வரும் விரை​வில் குணமடைந்து வர வேண்​டும் என நான் வேண்​டு​கிறேன். கூடிய விரை​வில் உங்​கள் அனை​வரை​யும் நான் சந்​திப்​பேன்.

இந்த இக்​கட்​டான நேரத்​தில் எங்​களு​டைய வலிகளை, நிலை​மை​யைப் புரிந்து கொண்​டு, எங்​களுக்​காகப் பேசிய அரசி​யல் கட்​சிகளை சார்ந்த நண்​பர்​கள், தலை​வர்​கள் அனை​வருக்​கும் எங்​களு​டைய நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

கரூரில் மட்டும் ஏன்: ஏறத்​தாழ 5 மாவட்​டங்​களுக்கு பிரச்​சா​ரத்​துக்கு சென்​றோம். அங்​கெல்​லாம் எது​வும் நடக்​க​வில்​லை. ஆனால், கரூரில் மட்​டும் ஏன் இப்​படி நடந்​தது? மக்​களுக்கு எல்லா உண்​மை​களும் தெரி​யும். எல்​லா​வற்​றை​யும் பார்த்​துக் கொண்​டிருக்​கிறார்​கள். கரூரைச் சேர்ந்த மக்​கள், அந்த உண்​மை​களை எல்​லாம் வெளியே சொல்​லும் போது, எனக்கு கடவுளே நேரில் வந்து இறங்கி அந்த உண்​மை​களை சொல்​வது​போலத் தோன்​றியது.

எந்த தவறும் செய்​ய​வில்​லை. விரை​வில் எல்லா உண்​மை​களும் வெளியே வரும். எங்​களுக்கு தரப்​பட்ட இடத்​தில் நாங்க நின்று பேசிக்​கொண்டு இருந்​ததை தவிர, நாங்​கள் எந்த தவறும் செய்​ய​வில்​லை. நாங்​கள் எது​வுமே செய்​ய​வில்​லை. ஆனாலும், எங்​கள் கட்​சியை சேர்ந்த நிர்​வாகி​கள், தோழர்​கள் மீதும், சமூக வலை​தளங்​களைச் சேர்ந்த நண்​பர்​கள், தோழர்​கள் மீதும் குற்​றப்​பத்​திரிகை (எஃப்​ஐஆர்) தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

‘சிஎம் சார்’ உங்​களுக்கு பழி வாங்க வேண்​டும் என்ற எண்​ணம் ஏதாவது இருந்​தால், என்னை என்ன வேண்​டு​மா​னாலும் செய்​யுங்​கள். தொண்​டர்​கள் மீது கை வைக்​காதீர்​கள். நான் வீட்​டில் இருப்​பேன் அல்​லது அலு​வல​கத்​தில்​தான் இருப்​பேன். என்னை என்ன வேண்​டு​மா​னாலும் செய்​யுங்​கள். நண்​பர்​களே, தோழர்​களே, நமது அரசி​யல் பயணம், இன்​னும் வலிமை​யாக​வும்​, இன்​னும்​ தைரி​யத்​தோடும்​ தொடரும்​.இவ்​வாறு விஜய்​ பேசியுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.