சென்னை: தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் மாதம் ரூ.8000 உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் வறுமை, தமிழுக்கு தொண்டு செய்பவர்களை சேராவண்ணம் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.7500ரும் மருத்துவப்படி ரூ.500 ம் என மொத்தம் ரூ.8000 வழங்கப்படுகிறது. […]
