திருமணமான இரண்டே மாதங்களில் என்னை ஏமாற்றி விட்டார்.. சாஹல் முன்னாள் மனைவி ஓபன்!

நட்சத்திர கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இவருக்கு 2024 டி20உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ஆர்சிபி அணியில் சில ஆண்டுகளாக விளையாடிய இவர், தற்போது பஞ்சாப் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக உள்ளார். இதனிடையே யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா நீதிமன்றத்தை அனுகி விவாகரத்து பெற்றுக்கொண்டனர். 

Add Zee News as a Preferred Source

யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களின் உறவு நன்றாக சென்றுக்கொண்டிருக்கிறது என அனைவரும் நினைத்த நிலையில், திடீரென கடந்த ஆண்டு விவாகரத்து பெறப்போவதாக மும்பை நீதிமன்றத்தை அனுகினர். இவ்வழக்கு விசாரணை மேற்கொண்ட நிலையில், சமீபத்தில் விவாகரத்தை பெற்றுக்கொண்டனர். இதன் பின்னர் யுஸ்வேந்திர சாஹல், கிரிக்கெட் வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கினார். 

மறுபுறம் தனஸ்ரீ, மாடலிங் மற்றும் சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சமீப காலமாக த்னஸ்ரீ வர்மா பல்வேறு நேர்காணல்களில் சாஹல் உடனான உறவு குறித்து பேசி வருகிறார். இந்த நிலையில், திருமணமான இரண்டு மாதங்களிலேயே சாஹல் தன்னை ஏமாற்றி மாட்டிக்கொண்டார் என தனஸ்ரீ வர்மா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசுகையில், சாஹல் உடன் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தெரிந்துவிட்டது, இந்த உறவு ஓராண்டிற்குள்ளாகவே முடிவுக்கு வந்துவிடும் என்று. நான் தவறு செய்துவிட்டதாக உணர்ந்தேன். சாஹல் என்னை ஏமாற்றுகிறார் என்பதை இரண்டு மாதங்களிலேயே கண்டுபிடித்தேன். ஆனால் ஒரு திருமண உறவு நீடிக்க வேண்டும் என்றால், நாமும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் ஒவ்வொரு விஷயத்தின்போதும் சாஹலுக்காக நின்றேன்.

நான் அவருக்காக நின்றது அனைவரும் பார்த்தனர். அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் சரி, அவருடன் நின்றிருக்கிறேன். அதனால்தான் அவருடனான உறவு முடிவுக்கு வந்தபோது அது உணர்வுப்பூர்வமாக இருந்தது என தெரிவித்தார்.  

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.