வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம்: வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்​துக்கு எதி​ராக கேரள சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் பின​ராயி விஜயன் நேற்று தீர்​மானம் கொண்டு வந்​தார். இதற்கு காங்​கிரஸ் தலை​மையி​லான யுடிஎப் கூட்​ட​ணி​யும் ஆதரவு தெரி​வித்​தது.

தீர்​மானத்தை தாக்​கல் செய்​து, முதல்​வர் பின​ராயி விஜயன் பேசி​ய​தாவது: கேரள மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை வெளிப்​படை​யான முறை​யில் செய்ய வேண்​டும். ஆனால், தலைமை தேர்​தல் ஆணை​யம் மேற்​கொள்ள நினைக்​கும் வாக்​காளர் பட்​டியல் திருத்​தம், உள்​நோக்​கம் கொண்​ட​தாக இருப்​ப​தாக சந்​தேகம் எழுகிறது. தேசிய குடிமக்​கள் பதிவு திட்​டத்தை அமல்​படுத்த, இது​போல் வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் மேற்​கொள்​ளப்​படு​வ​தாக பரவலாக சந்​தேகம் உள்​ளது.

பிஹார் மாநிலத்​தில் சமீபத்​தில் நடத்​தப்​பட்ட வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​கள் அதை உறு​திப்​படுத்​துகின்​றன. மேலும் இதுதொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது. இவ்​வாறு பின​ராயி விஜயன் பேசி​னார்.
பின்​னர், எம்​எல்​ஏ.க்​கள் சிலர் கூறிய திருத்​தங்​களு​டன்​ தீர்​மானம்​ நிறைவேற்றப்பட்டது​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.