lokesh: “AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்'' – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

‘கூலி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘கைதி-2’ படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று ( செப்டம்பர்-1) செய்தியாளர்களைச் சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம், “AI தெரிந்தவர்களுக்குதான் இனி எதிர்காலம் இருக்கும் என்று சொல்கிறார்கள். சினிமாவில் AI ஆதிக்கம் அதிகமாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், ” AI ஆதிக்கம் எல்லாம் இருக்காது. AI உதவி வேண்டுமானால் சினிமாவில் இருக்கும். அது ஒரு டெக்னாலஜி. … Read more

சென்னை புரசைவாக்கம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை….

சென்னை: சென்னையில்  புரசைவாக்கம் உள்பட  10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் ஆகஸ்டு 30ந்தேதி அன்று தங்க வியாபாரம் முறைகேடு தொடர்பாக பூக்கடை , மீனபாக்கம் உள்பட பல இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி … Read more

நண்பர்களுடன் சேர்ந்து போட்டிபோட்டு மது குடித்த பள்ளி மாணவர் கவலைக்கிடம்

திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் பள்ளி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து ஓணம் கொண்டாடினர். அவர்கள் அனைவரும் புதிய கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருந்த ஒரு வீட்டு கட்டிடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர். ஒருவருக்கொருவர் போட்டி போட்டு அதிகமாக மதுபானம் அருந்தி வந்தனர். அப்போது, அவர்களில் ஒருவன் மதுபானத்தில் தண்ணீர் சேர்க்காமல் நேரடியாக குடித்துள்ளார். இதையடுத்து, அந்த மாணவர் திடீரென மயங்கி விழுந்தார். அவர் சுயநினைவின்றி கிடந்ததை … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு

லண்டன், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடரும், அடுத்ததாக டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. அதன்படி முதல் ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரி புரூக் தலைமையிலான அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் சோனி பேக்கர் … Read more

கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க 1.25 கோடி ரூபாய் வழங்கியது வீணாகவில்லை – மு.க.ஸ்டாலின்

பெர்லின், தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பின்னர் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் தெரிவித்திருப்பதாவது:- பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன். ஐரோப்பாவில் … Read more

"போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு" – ஜெர்மனி சென்ற ஸ்டாலின் ட்வீட்டும், அண்ணாமலையின் விமர்சனமும்!

ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின், கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டதாக இன்று மாலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், “பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன். ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான Köln தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை வழங்கியது நமது திராவிட மாடல் அரசு. பழந்தமிழ் இலக்கியச் … Read more

தமிழகத்தில் செப்.7 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்​தில் செப்​.7-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வடக்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் செப்​.2-ம் தேதி (இன்​று) காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகக்​கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்​றில் வேக மாறு​பாடு நில​வு​கிறது. இதன் காரண​மாக, இன்​றும், நாளை​யும் வட தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், தென்​தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். … Read more

ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

புதுடெல்லி: அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வில் (‘டெட்’) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும் ‘டெட்’ தகுதித் தேர்வை கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து பல்வேறு ஆசிரியர்கள் கூட்டமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, மன்மோகன் … Read more

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து கூட்டறிக்கை: காரில் பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் ஆலோசனை

தியான்ஜின்: சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. மாநாட்டுக்கு பிறகு, ஒன்றாக புறப்பட்டு சென்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பிரதமர் மோடியும் காரிலேயே அமர்ந்து ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். முதல் நாள் மாநாட்டின்போது … Read more

இந்த படம் அதிக பேருக்கு பிடிக்காது… Bad Girl படத்திற்கு மிஷ்கின் கொடுத்த 'ரிவ்யூ'

Bad Girl Movie: இந்த திரைப்படம் கண்டிப்பாக 25 சதவீதம் பேருக்கு பிடிக்கும், அவர்கள் வெளியே பிடிக்கும் என சொல்வார்கள் என பேட் கேர்ள் பட விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசி உள்ளார்.