கட்சி ஜனநாயகம் பற்றி மேடையில் மட்டும்தான் எடப்பாடி பேசுகிறார்: செங்கோட்டையன் விமர்சனம்

கோபி: “ஜனநாயக முறைப்படி எங்கள் கட்சியில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என மேடையில் மட்டுமே எடப்பாடி பேசுகிறார். நான் அதிமுக ஒருங்கிணைப்பு பற்றி பேசியது குறித்து கட்சி ஜனநாயக முறைப்படி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.” என்று தனது கட்சிப் பொறுப்புகள் பறிப்பு குறித்து செங்கோட்டையன் எதிர்வினையாற்றியுள்ளார். முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து … Read more

அமெரிக்காவுடனான நல்லுறவை பிரதமர் மோடி மதிக்கிறார்: ஜெய்சங்கர் கருத்து

புதுடெல்லி: அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் எப்போதும் வலுவான தனிப்பட்ட உறவை கொண்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய ஜெய்சங்கர், “அமெரிக்காவுடனான நமது நல்லுறவுக்கு பிரதமர் மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார். அதிபர் ட்ரம்ப் விஷயத்தில், பிரதமர் மோடி எப்போதும் மிகச் சிறந்த தனிப்பட்ட நல்லுறவைக் கொண்டுள்ளார். ஆனால் விஷயம் என்னவென்றால், நாங்கள் அமெரிக்காவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்த நேரத்தில், அதற்கு … Read more

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முத்தாகியின் இந்திய வருகை ரத்து: காரணம் என்ன?

புதுடெல்லி: இந்த மாதம் திட்டமிடப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. முத்தாகி மீதான ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தடைகளில் இருந்து, இந்திய பயணத்திற்கான விலக்கு பெற முடியாததால் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அனைத்து முன்னணி தலிபான் தலைவர்களுக்கும் எதிராக பயணத் தடைகளை விதித்துள்ளது. இதனால் அவர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு விலக்கு பெற வேண்டும். தற்போது வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகியின் இந்திய பயணத்துக்கு விலக்கு … Read more

குக் வித் கோமாளி 6 : எலிமினேட் ஆன முக்கிய கோமாளி! கதறி அழுத சுனிதா..வைரல் வீடியோ

CWC 6 Elimination Umair Lateef Sunitha Cried : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6வது சீசனில் இருந்து முக்கிய போட்டியாளர் தற்போது எலிமினேட் ஆகியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு பாஜக காரணமா? நயினார் முக்கிய தகவல்!

தி.மு.க வை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைக வேண்டும். டி.டி.வி., ஓ.பி.எஸ் அனைவரும் கூட்டணிக்கு திரும்பி வர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

CSK: சிஎஸ்கே இந்த வீரரை விடவே விடாது… மினி ஏலத்தில் பிளான் இதுதான்!

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2025 ஐபிஎல் (IPL 2025) சீசனில் கடைசி இடத்தில் நிறைவு செய்தது. சிஎஸ்கேவின் 16 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல்முறையாக அந்த அணி கடைசி இடத்தில் நிறைவு செய்திருக்கிறது. Add Zee News as a Preferred Source Chennai Super Kings: சிஎஸ்கே இந்த வீரர்களை தூக்கும் பேட்டிங், பந்துவீச்சு, பிளேயிங் காம்பினேஷன் என சிஎஸ்கேவில் (CSK) கடந்த சீசனில் எக்கச்சக்க சிக்கல் … Read more

காந்தி கண்ணாடி: "கஷ்டப்பட்டு உழைத்த பணத்துலத்தான் உதவி பண்றேன்" – விமர்சனங்களுக்கு KPY பாலா பதில்

`கலக்கப் போவது யாரு’, `குக்கு வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா. தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக்-மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் ‘காந்தி கண்ணாடி’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். Gandhi Kannadi – KPY Bala இப்படம் நேற்று (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியானது. தவிர பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுப்பது, குழந்தைகளைப் படிக்க வைப்பது எனத் தொடர்ந்து சமூக சேவை செய்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் … Read more

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் 80% மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை:  மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் திராவிட மாடல் அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மொத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உங்களுடன் ஊழல் முகாம்களாக மாறிவிட்டன. மொத்தமாகப் பெறப்பட்ட மனுக்களில் 80% மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு 46 வகையான சேவைகளை வழங்கப்போவதாகக் கூறி நடத்தப்பட்டு வரும் உங்களுடன் … Read more

TVS Apache 20th Year Anniversary Edition – 20 ஆண்டுகளை கொண்டாட சிறப்பு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகமானது

டிவிஎஸ் மோட்டாரின் மிகவும் பிரசத்தி பெற்ற அப்பாச்சி பிராண்டின் வெற்றிகரமான 20 ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் வகையில் சிறப்பு Anniversary எடிசன் மற்றும் 2025 அப்பாச்சி RTR 160 4V,  அப்பாச்சி RTR 200 4V ஆகிய மாடல்களும் சந்தைக்கு வந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட அப்பாச்சி பிராண்டில் தற்பொழுது வரை சுமார் 65 லட்சத்துக்கும் கூடுதலான இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரேசிங் DNAவை மையமாக கொண்டு மிகச் சிறப்பான ஸ்போர்ட்டிவ் … Read more

ADMK: “கட்சிக்கு என்ன பாதிப்பு என்பது போகப் போகத் தெரியும்" – அழுத்தமாகப் பேசும் செங்கோட்டையன்

அ.தி.மு.க மூத்த தலைவரான செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க வெற்றி பெற முடியும். ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற அடிப்படையில் கட்சியைவிட்டு வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். 10 நாள்களில் பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்து அ.தி.மு.க-வை ஒன்றிணைக்க வேண்டும். இது நடந்தால்தான் சுற்றுப்பயணம், தேர்தல் பணிகளில் இறங்கி பணியாற்றுவேன்” எனத் தெரிவித்திருந்தார். செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி ADMK: “கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்” – எடப்பாடி … Read more