US: வரி முதல் வழக்கு வரை ட்ரம்ப் அதிரடியால் அமெரிக்க பொருளாதாரம் தள்ளாடுகிறதா?

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, அமெரிக்காவில் ‘தொழிலாளர் தினம்’ கொண்டாடப்பட்டது. இதனால், அன்று அமெரிக்காவில் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. ஆக, நேற்று தான் அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்தின் முதல் வர்த்தக நாள் நடைபெற்றது. இந்த நிலையில், முதல்நாளிலேயே அமெரிக்க பங்குச் சந்தை கிட்டத்தட்ட 250 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது இதற்கான காரணத்தை விளக்குகிறார் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் “அமெரிக்க பங்குச்சந்தையின் இந்தத் தள்ளாட்டம் நான்கு காரணிகளைப் பொறுத்து … Read more

காட்டுப்பள்ளியில் போலீஸார் மீது கல் வீச்சு சம்பவம்: வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைப்பு

பொன்னேரி: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் போலீஸார் மீது கற்கள் வீசி வன்முறையில் ஈடுபட்டதாக வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தனியார் தொழிற்சாலை ஓன்று செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அமரேஷ் பிரசாத்(35) என்ற ஒப்பந்த தொழிலாளி, நேற்று முன் தினம் இரவு மதுபோதையில், ஊழியர்களுக்கான தற்காலிக குடியிருப்பு வளாகத்தின் முதல் தளத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். … Read more

பிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா ராஜினாமா: விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என அறிவிப்பு

ஹைதராபாத்: பாரத் ராஷ்ட்ரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சியில் இருந்து கவிதா நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று அவர், ராஜினாமா செய்துள்ளார். மேலும், தனது அரசியல் எதிர்காலம் குறித்த முடிவை வரும் நாட்களில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர ராவ், தனது மகளும் நிஜாமாபாத் மேலவை உறுப்பினருமான கவிதாவை, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக நேற்று அறிவித்தார். இது தொடர்பாக பிஆர்எஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், … Read more

இந்தியாவுடனான நல்லுறவை ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது: அமெரிக்க எம்.பி ரோ கன்னா

நியூயார்க்: இந்தியாவுடனான அமெரிக்காவின் நல்லுறவை அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க காங்கிரஸ்(நாடாளுமன்றம்) உறுப்பினர் ரோ கன்னா தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல், அதிபருக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி விதித்த டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய முதலில் 25% வரி விதித்தார். பின்னர், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி மேலும் 25% வரியை விதித்தார். … Read more

அரசு பள்ளியில் தலைமை ஆசிரியைக்கு கால் அமுக்கிவிட்ட சிறுவர்கள்: வைரல் ஆகும் வீடியோ

தலைமை ஆசிரியையின் கை கால்களை பள்ளி சிறுவர்கள் அமுக்கி விட்டு பணிவிடை செய்யும் வீடியோ வைரல். ஆசிரியர் மீது எடுக்கப்பட நடவடிக்கையால் அதிர்ச்சியில் பெற்றோர்.

சஞ்சு சாம்சன் இல்லை.. சிஎஸ்கே அணிக்கு வரும் மற்றொரு ராஜஸ்தான் வீரர்.. யார் தெரியுமா?

ஐபிஎல் தொடரில் அணிகளுக்குள் சர்ச்சைகள், விரிசல் நிகழ்வுகள் தற்போது சாதாரணமாக மாறிவிட்டன. அதோடு கடந்த காலங்களில் மும்பை அணியில் ஏற்பட்ட கடும் குழப்பங்கள், கேப்டன்கள் மாற்றம் போன்ற பிரச்னைகள் இன்று மறநினைவாக உள்ளன. குறிப்பாக ரோகித் சர்மா நீக்கம் மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது அதிரடியான சம்பவமாகும். Add Zee News as a Preferred Source இப்போது 2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிர்ச்சி பரவியுள்ளது. அணி … Read more

எந்த கம்பெனி சிம் கார்டை ரீச்சார்ஜ் செய்யாமல் அதிக நாட்கள் வைத்திருக்கலாம்?

SIM card validity : இப்போது பெரும்பாலானோர் ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுகளை வைத்திருக்கிறார்கள். சிலர் வீட்டில் நல்ல நெட்வொர்க் கிடைப்பதற்காக இரண்டாவது சிம் கார்டைப் பயன்படுத்துகிறார்கள், வேறு சிலர் வங்கி சேவைகள் மற்றும் OTP பெறுவதற்காக பயன்படுத்துகிறார்கள். இதில், பலருக்கும் இருக்கும் கேள்வி என்னவென்றால், ரீசார்ஜ் செய்யாமல் சிம் கார்டு எவ்வளவு காலம் செயல்படும் என்பது தான். ஒவ்வொரு கம்பெனி சிம் கார்டுக்கும் ஒரு குறிப்பிட்ட வேலிடிட்டி இருக்கிறது. அவை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.. … Read more

லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

லண்டன்: லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், லண்டனில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழ்நாட்டைத்தான் சுற்றிச் சுழல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்குத் துணை நிற்கும் ஐரோப்பியப் பயணம்! தமிழ் உறவுகள் அளித்திட்ட அன்பும் – ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்திருக்கும் ஊக்கத்துடன் இங்கிலாந்து வந்தடைந்திருக்கிறேன். இந்தப் பயண அனுபவங்களை உடன்பிறப்புகளுடன் பகிர்கிறேன்… என புகைப்படங்களை பகிர்ந்து கடிதம் எழுதி  உள்ளார். தமிழக முதல்வரும் திமுக … Read more

Maruti suzuki victoris – ADAS உடன் மாருதி சுசுகி விக்டோரிஸ் எஸ்யூவி அறிமுகமானது

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள ADAS சார்ந்த பாதுகாப்புடன் 4X4 டிரைவ் பெற்ற மாருதி சுசுகி விக்டோரிஸ் எஸ்யூவி, பாரத் கிராஷ் டெஸ்ட் மையத்தால் சோதனை செய்யப்பட்டு 5 நட்சத்திர பாதுகாப்பினை பெற்றுள்ளதை உறுதி செய்துள்ளது. அனைத்திலும் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் பெற்று பெட்ரோல், மைல்டு ஹைபிரிட் , ஸ்டராங் ஹைபிரிட், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் இ விட்டாரா என அனைத்து விதமான ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது. குறிப்பாக சிஎன்ஜி ஆப்ஷனில் பூட்வசதியை … Read more

இரக்கமும் பாதுகாப்பும் இணையும் பாதை! – சமநிலைத் தீர்வு கிடைக்குமா? | #Straydogissue

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் நமது சமூகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக விவாதிக்கப்படும் ஒரு முக்கியமான பிரச்சினை – தெரு நாய்கள். ஒருபக்கம் “நாய்களும் உயிர்களே, அவற்றையும் காப்பாற்ற வேண்டும்” என்ற இரக்கமிக்க குரல்கள். மற்றொரு பக்கம் “நாய்கள் தாக்கி குழந்தைகள் உயிரிழக்கின்றன, மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது” … Read more