“அமைச்சர் பிடிஆர் குறிப்பிட்ட ‘ரூ.30,000 கோடி குற்றச்சாட்டு’ விசாரிக்கப்படும்” – மதுரையில் இபிஎஸ் உறுதி

மதுரை: “அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன் தெரிவித்த ரூ.30 ஆயிரம் கோடி குற்றச்சாட்டு குறித்து அதிமுக ஆட்சியில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட டிஎம் கோர்ட், மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஓபுளாபடித்துறை பகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று இரவு: “அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன்பு முதல்வரின் … Read more

ஜிஎஸ்டி வரி குறைப்பு செப்.22 முதல் அமல் – எவற்றுக்கு எவ்வளவு?

புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்பான வரி குறைப்பு செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இது தொடர்பாக பிரதமர் தலைமையில் மூத்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு, பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், … Read more

GST வரிகளில் அதிரடி மாற்றம்! ‘இந்த’ பொருட்களின் விலை குறைகிறது..

GST Slabs Reduced : ஜிஎஸ்டி கவுன்சில், தற்போது முக்கிய வரி அடுக்குகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்படி, புதிய விகிதங்கள் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் CEO ஆன இன்பநிதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

Inbanithi Red Giant Movies CEO : துணை முதலமைச்சரும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். 

"நான் முதல்வன்" திட்டத்தில் புதிய அப்டேட்! மாணவர்களுக்கான குட் நியூஸ்

Tamil Nadu Government : நான் முதல்வன்” திட்டத்தில் புதிய வசதியாக ‘தமிழ்நாடு திறன் பதிவேடு’ வெப்சைட் தொடங்கப்பட்டுள்ளது. முழு விவிரம்  

Vetrimaaran: "நானே ஸ்கிரிப்ட் எழுதாமல் இருக்கும்போது எப்படி அதை கொடுக்க முடியும்? " – வெற்றிமாறன்

வெற்றி மாறன் தயாரித்திருக்கும் ‘பேட் கேர்ள்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தோடு தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக சமீபத்தில் அவர் அறிவித்திருந்ததும் பலருக்கும் நினைவிருக்கலாம். இந்தப் படத்தின் வெளியீட்டை ஒட்டி வெற்றி மாறனும் சில நேர்காணல்கள் கொடுத்து வருகிறார். `BAD GIRL’ படம் அந்த வரிசையில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அளித்த பேட்டியில் அவருடைய ஸ்கிரிப்ட் எழுதும் முறை குறித்து பேசியிருக்கிறார். வெற்றி மாறன் பேசும்போது, “நான் என் நடிகர்களுக்கு ஸ்கிரிப்ட் … Read more

ஆப்கானிஸ்தானில்  நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1400ஐ கடந்தது… தொடரும் மீட்பு பணி…

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அரசு நேசக்கரம் நீட்டி,  நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது. ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாநிலத்தை மையமாகக் கொண்டு, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை (செப்டம்பர் 2ந்தேதி)  ரிக்டர் அளவில் 6.3 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பலமுறை நில அதிர்வுகளும் … Read more

டெல்லி யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தாழ்வான பகுதிகளை சூழ்ந்த தண்ணீர்

புதுடெல்லி, டெல்லி, அரியானாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 1.62 லட்சம் கனஅடியும், வஜிராபாத் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 1.38 லட்சம் கனஅடியும் திறந்து விடப்பட்டன. இதன் காரணமாக டெல்லியின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோரத்தின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் பாதுகாப்பான இடத்துக்கு இடம் பெயர்ந்தனர். … Read more

முதல் டி20: ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு தேர்வு

ஹராரே, இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை முழுமையாக கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் … Read more

அமெரிக்காவுக்கு எதிராக சதி: சீனா மீது டிரம்ப் பாய்ச்சல்

வாஷிங்டன், சீனாவின் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் கலந்து கொண்டதை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது: சீனாவுக்கு வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து சுதந்திரம் கிடைக்க, அமெரிக்கா அளித்த மகத்தான ஆதரவையும் சிந்திய ரத்தத்தையும் சீன அதிபர் ஜின்பிங் குறிப்பிடுவாரா இல்லையா என்பதுதான் பதிலளிக்கப்பட வேண்டிய பெரிய கேள்வி. சீனாவின் வெற்றி மற்றும் பெருமைக்கான தேடலில் பல … Read more