மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்: தண்ணீர் அருந்தப் போவதில்லை என மனோஜ் ஜாரங்கி சபதம்

மும்பை: மராத்தா சமூகத்துக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரி, 4 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரும் மனோஜ் ஜாரங்கி இன்று முதல் தண்ணீர் அருந்துவதை நிறுத்துவதாக சபதம் செய்துள்ளார். ஓபிசி பிரிவின் கீழ் மராத்தா சமூகத்துக்கு 10% இடஒதுக்கீடு கோரியும், மராத்தாக்கள் குன்பிகளின் துணை சாதி என்று அரசாங்கம் அறிவிக்கக் கோரியும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மனோஜ் ஜாரங்கி நடத்தி வருகிறார். இதுகுறித்து … Read more

பனிப்போர் மனநிலையை எதிர்க்க வேண்டும்: எஸ்சிஓ உச்சிமாநாட்டில் சீன அதிபர் பேச்சு

தியான்ஜின்: பனிப்போர் மனநிலை, பிராந்திய மோதல், மிரட்டல் நடைமுறை ஆகியவற்றை எதிர்க்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். எஸ்சிஓ உச்சிமாநாட்டில் உரை நிகழ்த்திய சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவை மறைமுகமாக விமர்சித்தார். அவர் தனது உரையில், “இரண்டாம் உலகப் போர் குறித்த சரியான வரலாற்றுக் கண்ணோட்டத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும். பனிப்போர் மனநிலை, பிராந்திய மோதல், மிரட்டல் நடைமுறை ஆகியவற்றை எதிர்க்க வேண்டும்” என … Read more

ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி; இனி TET கட்டாயம்… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

TET Compulsory: ஆசிரியர்கள் தங்களின் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கோபிநாத் போல தொகுப்பாளராகும் பார்த்திபன்! புதிய நிகழ்ச்சியில் அறிமுகம்!

நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்கும், பிட்ச் இட் ஆன் – நீங்களும் ஆகலாம் கலாம் கண்டுபிடிப்பாளர்களுக்கான புதுமையான நிகழ்ச்சி! 

அதிக ஊதியம் தருவதாக நம்ப வைத்து தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றுவதா? அன்புமணி ராமதாஸ்!

அதிக ஊதியம் தருவதாக நம்ப வைத்து தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றுவதா? துரோகத்திற்கான பெருந்தண்டனையிலிருந்து திமுக  தப்ப முடியாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.   

பிட்னெஸ் டெஸ்ட்டில் ரோகித் சர்மா.. பாஸ் ஆனாரா? உண்மை என்ன?

அதிரடி தொடக்க வீரரான ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதையடுத்து இந்தாண்டு மே மாதத்தில் தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார். இதனால் இனி அவரை ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பார்க்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டது.  Add Zee News as a Preferred Source இந்த நிலையில், ரோகித் சர்மாவிற்கு யோ – … Read more

“BAD GIRL-தான் எனது தயாரிப்பின் கடைசி படம்; தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடுகிறோம்'' – வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘BAD GIRL’. அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர். அமித் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (செப்டம்பர் 1) சென்னையில் நடைபெற்றது. … Read more

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் – பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் – பலி எண்ணிக்கை 600ஐ தாண்டியது…

காபூல்: ஆப்கானிஸ்தானில்   இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்  கால பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் ஏராளாமானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை  (மதியம் 1மணி நிலவரம்) பலி எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த  நிலநடுக்கத்தின் தாக்கம் , இந்தியா,  கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில், செப்டம்பர் 1, 2025 அன்று காலை  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் … Read more

செப்டம்பர் 3ல் மாருதியின் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது

மாருதி சுசூகியின் அரினா டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள புதிய எஸ்யூவி Victoris என அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் க்ரெட்டா உள்ளிட்ட எஸ்யூவிகளுக்கு கடும் சவாலினை ஏற்படுத்துவதுடன் பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா என இரு மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. வெளியடப்படுள்ள டீசரில் எல்இடி டெயில் விளக்கு சிக்யூன்சியல் முறையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் விக்டோரிஸில் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் எஞ்சினை எதிர்பார்க்கப்படுவதனால், மிக சிறப்பான மைலேஜ் வெளிப்படுத்தலாம். … Read more

Madharaasi: "எனக்கு சரியான சம்பளம் இல்லாதபோதும் என் மனைவி என்னை ஏற்றுக் கொண்டார்" – சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷனுக்காக முக்கிய நகரங்களுக்கு சிவகார்த்திகேயன் சுற்றி வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாகவும், வித்யுத் ஜம்வால் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் சிவகார்த்திகேயனும் ருக்மிணி வசந்த்தும் கலந்து கொண்டு திரைப்படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார்கள். மதராஸி – சிவகார்த்திகேயன் அப்போது, சிவகார்த்திகேயன் பேசுகையில், “இந்த முறை என்னுடைய ‘மதராஸி’ திரைப்படத்திற்காக … Read more