உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத மதரசாவில் 40 சிறுமிகள் கழிப்பறைக்குள் அடைப்பு

லக்னோ: உ.பி.​யின் பரைச் மாவட்​டம், பயாக்​பூர் அரு​கில் உள்ள பகல்​வாரா கிராமத்​தில் 3 மாடி கட்​டிடம் ஒன்​றில் சட்​ட​விரோத​மாக மதரசா செயல்​படு​வது குறித்து மாவட்ட நிர்​வாகத்​திற்கு தொடர்ந்து புகார்​கள் வந்​தன. இதையடுத்து பயாக்​பூர் துணை ஆட்​சி​யர் அஸ்​வினி குமார் பாண்டே தலை​மை​யில் அதி​காரி​கள் கடந்த புதன்​கிழமை அங்கு ஆய்வு நடத்​தச் சென்​றனர்.

அப்​போது அதி​காரி​கள் மாடிக்​குச் செல்​வதை மதரசா நடத்​துபவர்​கள் தடுக்க முயன்​றனர். எனினும் போலீ​ஸார் உதவி​யுடன் அக்​கட்​டிடத்​தில் அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். அப்​போது மாடி​யில் இருந்த கழிப்​பறை பூட்​டப்​பட்டு இருந்​தது. இதையடுத்து பெண் போலீ​ஸார் அதன் கதவை திறந்​த​போது, 9 முதல் 14 வயதுக்​குட்​பட்ட 40 சிறுமிகள் ஒரு​வர் பின் ஒரு​வ​ராக கழிப்​பறை​யில் இருந்து வெளியே வந்​தனர்.

மதரசா​வில் 8 அறை​கள் இருக்​கும்​போது கழிப்​பறைக்​குள் சிறுமிகள் இருந்​தது குறித்து அதி​காரி​கள் கேள்வி எழுப்​பினர். இதற்கு சிறுமிகள் பீதி​யடைந்து தாங்​களாகவே கழிப்​பறைக்​குள் பூட்​டிக்​கொண்​ட​தாக ஆசிரியை ஒரு​வர் கூறி​னார்.

அந்த மதரசா அரசின் அனு​ம​தி​யின்றி இயங்கி வந்​தது தெரிய​வந்​ததை அடுத்து அதை மூட​வும் சிறுமிகளை பத்​திர​மாக அவர்​களின் வீட்​டுக்கு அனுப்பி வைக்​க​வும் அதி​காரி​கள் உத்​தர​விட்​டனர். பரைச் கூடு​தல் எஸ்​.பி. ராமானந்த் பிர​சாத் கூறுகை​யில், இந்த சம்​பவம் தொடர்​பாக பெற்​றோர் அல்​லது அதி​காரி​கள் தரப்​பில் புகார் அளிக்​கப்​பட​வில்​லை. புகார் அளித்​தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.