டி20 உலக கோப்பை 2026: இந்த 3 மாற்றங்கள் கண்டிப்பாக தேவை! என்ன என்ன தெரியுமா?

2025 ஆசிய கோப்பையில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 9வது ஆசிய கோப்பையை வென்றது. இருப்பினும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை வெல்ல இந்த அணி மட்டும் போதாது என்று கூறப்படுகிறது. காரணம், ஆசிய கோப்பையில் இந்தியாவை வெல்லும் சக்தி எந்த ஒரு அணிக்கும் இல்லை. ஆனால் உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற மெகா-பவர் அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடும் சூழல் உருவாகும். எனவே, இந்தியா வெற்றி பெற அணியில் முக்கியமான மூன்று மாற்றங்களை பிசிசிஐ கட்டாயம் செய்ய வேண்டும் என பெரும்பாலான கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்துகின்றனர். என்ன மாற்றம் வேண்டும் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Add Zee News as a Preferred Source

A dominant performance capped by an unbeaten campaign 

Congratulations to #TeamIndia on winning #AsiaCup2025 

Scorecard  https://t.co/0VXKuKPkE2#Final pic.twitter.com/n9fYeHfByB

— BCCI (@BCCI) September 28, 2025

ஓபனர் இடத்தில் மாற்றம்

2025 ஆசிய கோப்பையில், ஷுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதனால் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் கூட்டணி மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஓப்பனராக கில் 7 போட்டிகளில் 127 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதே சமயம் சஞ்சு சாம்சன் 4 போட்டிகளில் 132 ரன்கள் எடுத்துள்ளார். எனவே மீண்டும் ஓப்பனராக சாம்சன் வர வேண்டும் என்றும், கில்லை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.

மிடில் ஆர்டரில் ஷ்ரேயஸ் ஐயர்

சஞ்சு சாம்சன் ஓப்பனராக மாறினால், மிடில் ஆர்டரில் ஒரு இடம் காலியாகும். அந்த இடத்தில் ஷ்ரேயஸ் ஐயரை ஆட வைத்தால், அணி இன்னும் பலம் ஆகும் என்று கூறப்படுகிறது. IPL 2025ல் 17 போட்டிகளில் 50க்கும் அதிகமான பேட்டிங் ஆவரேஜுடன், 175 ஸ்ட்ரைக் ரேட்டில் 604 ரன்கள் அடித்துள்ளார் ஷ்ரேயஸ் ஐயர். எனவே அவரை அணியில் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது ஐயர் ஒருநாள் அணியில் மட்டுமே இடம் பெற்று வருகிறார்.

இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர்

ஆசிய கோப்பையில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே முழுநேர வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். டி20 உலக கோப்பையில், வலுவான எதிர் அணிகளுக்கு எதிராக, பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களை சமாளிக்க பும்ராவுடன், அர்ஷ்தீப் சிங் போன்ற இன்னும் ஒரு முழுநேர பந்துவீச்சாளர் அவசியம் தேவை. ஆனால் அர்ஷ்தீப் சிங் அணிக்குள் வந்தால் ஒரு ஸ்பின்னர் அல்லது ஆல்ரவுண்டரை இழக்க வேண்டி இருக்கும். இதனால் இந்திய அணி குழப்பத்தில் இருந்து வருகிறது. இந்த மூன்று முக்கியமான மாற்றங்களை இந்தியா செய்கிறது என்றால் மட்டுமே உலக கோப்பையின் கனவு நிஜமாகும் வாய்ப்பு அதிகம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.