பிஹாரில் தனிக் கட்சி தொடங்கினார் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப்

பாட்னா: பிஹார் மாநிலத்​தில் விரை​வில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், லாலு பிர​சாத் யாத​வின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், பிஹாரில் தனிக் கட்சி தொடங்கி உள்​ளார். தனது கட்​சிக்கு ‘ஜன் சக்தி ஜனதா தளம்’ என்று தேஜ் பிர​தாப் பெயர் சூட்​டி​யுள்​ளார். கட்​சி​யின் சின்​ன​மாக ‘கரும்​பல​கை’ தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளது.

ஆர்​ஜேடி நிறு​வனர் லாலு பிர​சாத்​தின் மூத்த மகன் தேஜ் பிர​தாப். காங்​கிரஸ், ஆர்​ஜேடி கூட்​டணி ஆதர​வுடன் நிதிஷ் குமார் முதல்​வ​ராக இருந்த போது, கடந்த 2015 முதல் 2017-ம் ஆண்டு தேஜ் பிர​தாப் கேபினட் அமைச்​ச​ராக இருந்​தார். இவரது மனைவி ஐஸ்​வர்யா ராயுடன் கருத்து வேறு​பாடு ஏற்​பட்​ட​தால் பிரிந்து வாழ்​கிறார். இவர்​களது விவாகரத்து வழக்கு நிலு​வை​யில் உள்​ளது.

இதற்​கிடை​யில், கடந்த மே மாதம் தேஜ் பிர​தாப் தனது சமூக வலைதள பக்​கத்​தில் வெளி​யிட்ட ஒரு பதி​வில், அனுஷ்கா என்ற பெண்​ணுடன் சேர்ந்து வாழ்​வ​தாக கூறி​யிருந்​தார். பின்​னர் அந்​தப் பதிவை தேஜ் பிர​தாப் நீக்​கி​விட்​டார். எனினும், குடும்ப கவுரவத்தை மதிக்​க​வில்லை என்று கூறி தேஜ் பிர​தாப்பை ஆர்​ஜேடி கட்​சி​யில் இருந்து 6 ஆண்​டு​களுக்கு நீக்​கு​வ​தாக லாலு பிர​சாத் அறி​வித்​தார். இந்​நிலை​யில், தேஜ் பிர​தாப் தனிக் கட்சி தொடங்கி உள்​ளது பிஹார் அரசி​யலில் சலசலப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.