காஞ்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: மத்​திய மேற்கு மற்​றும் அதையொட்​டிய வடமேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், தெற்கு ஒடி​சா, வடக்கு ஆந்​திரா இடையே நேற்று இரவு கரையை கடந்​தது. இதன் தாக்​கம் காரண​மாக தமிழகத்​தில் இன்று (அக்​.3) முதல் வரும் 8-ம் தேதி வரை சில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகத்​தில் இன்று காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திரு​வண்​ணா​மலை, விழுப்​புரம், கள்​ளக்​குறிச்​சி, சேலம் மாவட்​டங்​களி​லும்.நாளை திரு​வள்​ளூர், சென்​னை,செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், ராணிப்பேட்​டை, வேலூர் மற்​றும் ராம​நாத​புரம் மாவட்​டங்​களி​லும், வரும் 5-ம் தேதி மதுரை, விருதுநகர், சிவகங்​கை, தேனி மற்​றும் திண்​டுக்​கல் மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய, மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. தென் தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் அதையொட்​டிய குமரிக்​கடல் பகு​தி​களில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 60 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.