சீன அதிபரை 4 வாரங்களில் நேரில் சந்தித்து பேசுவேன்; டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு பதவியேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சீனா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரிகளையும் விதித்து வருகிறார்.

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்னும் 4 வாரங்களில் நேரில் சந்தித்து பேசுவேன் என டிரம்ப் கூறினார். இந்த சந்திப்பில், அமெரிக்காவின் சோயா பீன்ஸ் விவசாயிகளின் விவகாரம் பற்றி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் சோயா பீன்ஸ்களை சீன அரசு வாங்க மறுக்கிறது. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எங்களுக்கு வரி விதிப்புகளால் நிறைய பணம் கிடைத்திருக்கிறது.

அதில் சிறியதொரு தொகையை எடுத்து விவசாயிகளுக்கு கொடுத்து உதவுவோம். எங்களுடைய விவசாயிகளை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம் என்று அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் டிரம்ப் பதிவிட்டு உள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.