Jio Vs Airtel Vs BSNL 60 Days Vailidity Plans: நீங்கள் மலிவு விலையில் நீண்ட கால ரீசார்ஜ் திட்டங்களைத் தேடுகிறீர்கள் என்றால், ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் (Jio Vs Airtel Vs BSNL) இரண்டு மாதங்கள் அதாவது 60 நாட்கள் வரை வேலிடிட்டி கொண்ட சில திட்டங்களையும், அதில் அன்லிமிடெட் தரவு மற்றும் அழைப்பு அம்சங்களையும் வழங்குகின்றன. இந்த ரீசார்ஜ் திட்டங்களை பற்றி இங்கே அறிந்து கொள்வோம்…
Add Zee News as a Preferred Source
BSNL இன் ரூ.345 திட்டம்:
இந்த திட்டம் குறைந்த விலையில் நீண்ட செல்லுபடியாகும் நன்மையை வழங்குகிறது. இது பயனர்களுக்கு 60 நாட்கள் வேலிடிட்டியை தருகிறது, இதன் மூலம் நீங்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொந்தரவில் இருந்து விடுப்படுவீர்கள். இந்த திட்டம் தினசரி 1 ஜிபி டேட்டா, இலவச அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. அதாவது இந்த பேக்கின் விலை ஒரு நாளைக்கு ₹5.75 மட்டுமே ஆகும்.
BSNL இன் ரூ.347 திட்டம்:
BSNL வழங்கும் இந்த சிறந்த திட்டத்தின் விலை வெறும் ரூபாய் 347 ஆகும். 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்கள் தினசரி 2GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றைப் பெறுகிறார்கள். நீங்கள் நிறைய டேட்டாவைப் பயன்படுத்தி குறைந்த விலையில் அதிக நன்மைகளைத் தேடுகிறீர்கள் என்றால், இந்தத் திட்டம் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
ஜியோ ரூ.579 ரீசார்ஜ் திட்டம்:
ஜியோ நிறுவத்தின் ரூ.579 திட்டம் டேட்டா நன்மைகளை தவிர்த்து பல நன்மைகளை வழங்குகிறது. இது வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது, அதனுடன் இந்த ரீசார்ஜ் திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இது ஜியோடிவி, ஜியோக்ளூட் மற்றும் ஜியோசினிமாவிற்கான இலவச அணுகலையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.10 செலவாகும்.
ஏர்டெல் ரூ.649 ரீசார்ஜ் திட்டம்:
ஏர்டெல் நிறுவத்தின் ரூ.649 திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த பேக் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதியை வழங்குகிறது. இந்த ஏர்டெல் திட்டம் 2 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த ஏர்டெல் திட்டம் ஆன்லைன் வகுப்புகள், கேமிங் மற்றும் OTT தளங்களை அனுபவிப்பதற்கு ஏற்ற திட்டமாகும்.
ஏர்டெல் ரூ.619 ரீசார்ஜ் திட்டம்:
ஏர்டெல்லின் ரூ. 619 திட்டம் 60 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இதனுடன் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், நீங்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.
BSNL
ரூ.345 திட்டம்
60 நாட்கள் வேலிடிட்டி
அன்லிமிடெட் அழைப்பு
தினசரி 1 ஜிபி டேட்டா
BSNL
ரூ.347 திட்டம்
56 நாட்கள் வேலிடிட்டி
அன்லிமிடெட் அழைப்பு
தினசரி 2GB டேட்டா
Jio
ரூ.579 திட்டம்
56 நாட்கள் வேலிடிட்டி
அன்லிமிடெட் அழைப்பு
தினசரி 1.5 ஜிபி டேட்டா
Airtel
ரூ.649 திட்டம்
56 நாட்கள் வேலிடிட்டி
அன்லிமிடெட் அழைப்பு
தினசரி 2 ஜிபி டேட்டா
Airtel
ரூ.619 திட்டம்
60 நாட்கள் வேலிடிட்டி
அன்லிமிடெட் அழைப்பு
தினசரி 1.5 ஜிபி டேட்டா
About the Author
Vijaya Lakshmi