‘அரட்டை’ பயனாளர் தகவல்களை விற்க மாட்டோம்: சோஹோ குளோபல் புராடெக்ட் தலைவர் ஜெரி உறுதி

புதுடெல்லி: சோஹோ நிறு​வனர் மற்​றும் தலைமை விஞ்​ஞானி ஸ்ரீதர் வேம்​பு, இந்​தி​யா​வில் உரு​வாக்​கப்​பட்ட ‘அரட்​டை’ செயலியை முழு வீச்​சில் கொண்டு வர தீவிர​மாக இருக்​கிறார்.

இந்​தி​யா​வில் உரு​வாக்​கப்​பட்ட அரட்டை செயலி இலவச​மானது, பயன்​படுத்த எளி​தானது, பாது​காப்​பானது. சோஹோ​வால் தொடங்​கப்​பட்ட அரட்டை செயலியை வாட்ஸ் அப், டெலிகி​ராம் போல் பயன்படுத்தலாம். இந்​நிலை​யில், ‘அரட்​டை’ செயலி​யின் குளோபல் புராடெக்ட் தலை​வர் ஜெரி ஜான் முதல் முறை​யாக அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரட்டை செயலி 10 லட்​சம் வாடிக்​கை​யாளர்​களை தாண்டி விட்​டது என்ற தகவலை பகிர்ந்து கொள்​வ​தில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்​போது ‘மேட் இன் இந்​தி​யா’ தயாரிப்​பு​கள் விஷ​யத்​தில் பயனாளி​கள் மிகுந்த ஆர்​வ​மாக உள்​ளனர். ஆனால், இந்த எண்​ணத்தை நீடித்து நிலைக்க செய்​வதற்​காக எங்​கள் குழு மும்​முர​மாக பணி​யாற்றிவரு​கிறது. குறிப்​பாக தனி​யுரிமை, மதிப்பு சார்ந்த விஷ​யங்​களில் கவனம் செலுத்தி வரு​கிறோம்.

உரை​யாடல் மற்​றும் வீடியோ அழைப்​பு​களைப் பொறுத்த வரை​யில் முழு​மை​யான பாது​காப்​பு​தான் (எண்ட் டூ எண்ட் என்​கிரிப்​ஷன்) அதி​கபட்ச முன்​னுரிமை​யாக இருக்​கிறது. அரட்டை செயலி​யில் யுபிஐ போன்ற பல்​வேறு வசதி​களை சேர்ப்​பது குறித்​தும் பரிசீலித்து வரு​கிறோம்.

வாட்ஸ் அப் செயலிக்கு மாற்​றாக அரட்டை இருக்​குமா என்​பது குறித்து கேட்​கிறார்​கள்? எங்​களைப் பொறுத்த வரை​யில் ஒரு பொருள் வாடிக்​கை​யாளர்​களுக்கு மதிப்​புமிக்​க​தாக இருந்​தால், அதை வாடிக்​கை​யாளர்​கள் ஏற்​றுக் கொள்​வார்​கள் என்று நம்​பு​கிறோம். போட்டி என்​பது புது​மை​களை கொண்டு வரவும், வர்த்​தகத்​தில் ஈடு​பட​வும் போட்டி உதவும்.

அரட்டை பெயரை மாற்​றும் எண்​ணம் எது​வும் இல்​லை. வாடிக்​கை​யாளர்​களின் தகவல்​களை மூன்​றாவது நபருக்கு கண்​டிப்​பாக விற்க மாட்​டோம். எதிர்​கால வளர்ச்​சிக்​கான வழி​முறை​களை​யும் எங்​கள்​ ஆர்​ & டி குழு ஆய்​வு செய்​து வரு​கிறது. இவ்​வாறு ஜெர்​ரி ஜான்​ கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.