Big Billion Days Ending Tonight: ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் கடைசி நாள் இன்று ஆகும். இந்த அற்புதமான விற்பனை இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது. கடைசி நிமிட தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் விரும்பினால், இதைவிட சிறந்த தருணம் உங்களுக்கு கிடைக்காது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் உட்பட பல தயாரிப்புகளில் இந்த விற்பனை தொடர்ந்து அற்புதமான சலுகைகளை வழங்குகிறது. விற்பனையின் கடைசி நாளில் கிடைக்கும் சிறப்புச் சலுகைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
Add Zee News as a Preferred Source
இன்று பிளிப்கார்ட் விற்பனையின் கடைசி நாள்
பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் (Flipkart Big Billion Days) விற்பனை கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் நேரலையில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில், நிறுவனம் அதன் முடிவு தேதியைக் குறிப்பிடவில்லை. எனினும், பிளிப்கார்ட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனை இன்றிரவு முடிவடைகிறது. அதாவது தள்ளுபடி செய்யப்பட்ட பொருட்களை வாங்க இன்று கடைசி நாள் ஆகும்.
விற்பனையின் கடைசி நாளில் அற்புதமான சலுகைகள்
பிளிப்கார்ட் விற்பனையின் கடைசி நாளான இன்றும் சிறப்பான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் சிறந்த தள்ளுபடியில் கிடைக்கின்றன. அதேபோல் சாம்சங்கின் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி இந்த விற்பனையில் ரூ. 10,116க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐபோன் 16க்கு அற்புதமான தள்ளுபடி
ஸ்மார்ட்போன்களைப் பற்றி பேசுகையில், Vivo T4 5G இன்று 18,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதேபோல் iPhone 16 ரூபாய் 53,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது, மேலும் Realme 15 Pro ரூபாய் 26,999க்கு கிடைக்கிறது. இவைகளுடன் பல பொருட்களில் இன்னும் ஏராளமான தள்ளுபடி சலுகைகள் உள்ளன.
இந்த Flipkart விற்பனையில் வெறும் ரூபாய் 27,999க்கு Wi-Fi பிரிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனையின் கடைசி நாளில் Asus Creator 3050 லேப்டாப் ₹49,990க்கு வாங்கலாம்.
ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்களில் தள்ளுபடிகள்
ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்களை வெறும் ரூபாய் 16,249 முதல் வாங்கலாம். ஹீரோவின் சிறந்த பைக்குகள் ரூபாய் 50,429 முதல் பட்டியலிடப்பட்டுள்ளன. மலிவு விலையில் பொருட்களை வாங்குவதன் மூலம் பணத்தை சேமிக்க விரும்பினால், இதுவே உங்களுக்கான கடைசி வாய்ப்பு ஆகும்.
About the Author
Vijaya Lakshmi