சாய் சுதர்சனை வெளியே தள்ளுங்க… அவருக்கு பதில் இந்த அதிரடி வீரரா? – ஷாக்

India National Cricket Team: மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் (India vs West Indies) மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (அக். 2) தொடங்கியது.

Add Zee News as a Preferred Source

IND vs WI: 162 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்

டாஸ் வென்று பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி (Team West Indies) வெறும் 44.1 ஓவர்களுக்கு பேட்டிங் செய்து 162 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்களை அடித்தார். ஷாய் ஹோப் 26, கேப்டன் ரோஸ்டன் சேஸ் 24 ரன்களை அடித்திருந்தனர். மற்ற அனைவரும் 20 ரன்களுக்கும் கீழ்தான். இந்திய அணி பந்துவீச்சை பொருத்தவரை சிராஜ் 4, பும்ரா 3, குல்தீப் 2, வாஷிங்டன் 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

IND vs WI: 41 ரன்கள் பின்தங்கியிருக்கும் இந்தியா

இந்திய அணி (Team India) நேற்று மூன்றாவது செஷனில் தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 38 ஓவர்கள் பேட்டிங் செய்து 121 ரன்களை அடித்து 2 விக்கெட்டை இழந்துள்ளது. இன்னும் 41 ரன்கள் இந்தியா பின்தங்கி உள்ளது. ஜெய்ஸ்வால் 36 ரன்களுக்கு சீல்ஸ் வேகத்திலும், சாய் சுதர்சன் 7 ரன்களில் சேஸ் சுழலிலும் சிக்கி ஆட்டமிழந்தனர். ஓபனர் கேஎல் ராகுல் 53 ரன்களுடனும், கேப்டன் சுப்மான் கில் 18 ரன்களுடனும் இன்றைய (அக். 3) இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்குவார்கள்.

That’s Stumps on Day 1!

KL Rahul (53*) leads the way for #TeamIndia as we reach 121/2

Captain Shubman Gill (18*) is in the middle with hi

Scorecattps://t.co/MNXdZceTab#INDvWI | @klrahul | @ShubmanGill | @IDFCFIRSTBank pic.twitter.com/BCfpGs7OV7

— BCCI (@BCCI) October 2, 2025

IND vs WI: பலமான நிலையில் இந்திய அணி

இந்திய அணி பெரும்பாலும் இந்த இரண்டு போட்டிகளையும் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணி அனுபவமற்ற வீரர்களால் நிரம்பி உள்ளதால், வலுவான இந்திய அணியை அவர்களால் எதிர்கொள்ள இயலவில்லை என்பது நேற்று முதல் நாளிலேயே தெரிந்தது. இருப்பினும் அதில் இருந்து மீண்டு வந்து எப்படி வெஸ்ட் இண்டீஸ், இந்தியாவுக்கு போட்டியளிக்கிறது என பார்க்க அனைவரும் ஆர்வலுடன் இருக்கிறார்கள்.

IND vs WI: தொடர்ந்து சொதப்பும் சாய் சுதர்சன்

இது ஒருபுறம் இருக்க, இந்திய அணியின் நம்பர் 3 பிரச்னை தீர்ந்தபாடில்லை. நம்பர் 3 வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் (Sai Sudharsan) மீண்டும் ஒருமுறை சொதப்பினார். இடதுகை பேட்டரான அவர் ரோஸ்டன் சேஸின் ஆஃப் ஸ்பின் வலையில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தார். சாய் சுதர்சன் இங்கிலாந்தில் விளையாடிய மூன்று போட்டிகளில் முறையே 0 & 30, 61 & 0, 38 & 11 என சொற்பமான ரன்களையே அடித்தார். ஒரே ஒரு அரைசதம் மட்டும் மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் அடித்திருந்தார். பெரிதாக சோபிக்கவில்லை.

Team India: காத்திருக்கும் தேவ்தத் படிக்கல்

ஆனால், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் 73, 75 & 100 என இந்திய ஏ அணிக்கு ரன்களை குவித்தார். அதனால் தான் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், சாய் சுதர்சனுக்கு போட்டியாக தேவ்தத் படிக்கலும் (Devdutt Padikkal) ஸ்குவாடில் இருக்கிறார். இந்தச் சூழலில் சாய் சுதர்சன் தொடர்ந்து சொதப்புவது இந்திய அணி ரசிகர்களுக்கு அவர் மீது பெரும் ஆதங்கம் ஏற்பட்டுள்ளது.

அக். 14ஆம் தேதியோடு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்துவிடும். அதன்பின் ரஞ்சி கோப்பை தொடர் தொடங்குகிறது. உள்நாட்டில் வரும் நவம்பரில்தான் இந்தியா – தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இருக்கிறது. அதன்பிறகு இந்திய அணி அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உள்ளது. எனவே, சாய் சுதர்சனுக்கு மேற்கு இந்திய தீவுகள் தொடரில் முழு வாய்ப்பு கொடுக்கப்படும். அவர் சிறப்பாக விளையாடினாலே தென்னாப்பிரிக்கா தொடரில் வாய்ப்பு வழங்கப்படும். ஒருவேளை சாய் சுதர்சன் தொடர்ந்து சொதப்பினால் வாய்ப்பு தேவ்தத் படிக்கல் கைகளில் மாறும்.

Sai Sudharsan Replacement: டெஸ்ட் அணியில் திலக் வர்மாவா?

ஆனால் இது ஒருபுறம் இருக்க, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் புதிய கோரிக்கை ஒன்றை வைக்கத் தொடங்கி உள்ளனர். சாய் சுதர்சன் நேற்றும் ஏமாற்றிய நிலையில் அவரை தூக்கிவிட்டு டெஸ்ட் அணிக்குள் திலக் வர்மாவை (Tilak Varma) கொண்டுவர வேண்டும் என X தளத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். மேலும், பிசிசிஐ இதை கணக்கில் எடுக்க வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.

Team India: நம்பர் 3 ஸ்பாட் யாருக்கு?

சாய் சுதர்சன் தொடர்ந்து சொதப்பினாலும் திலக் வர்மாவை டெஸ்ட் அணிக்குள் கொண்டுவர சொல்வது பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா சிறப்பாக செயல்படுகிறார் என்றாலும் அவரை டெஸ்ட் அணிக்கு அழைத்து வருவது சரியில்லை என்றும் மற்றொரு தரப்பு கூறுகிறது. திலக் வர்மா முதல் தர போட்டிகளில் 34 இன்னிங்ஸில் விளையாடி 1562 ரன்களை அடித்துள்ளார். சராசரி 52.06 ஆக உள்ளது. 7 சதம் மற்றும் 5 அரைசதம் பதிவு செய்துள்ளார். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கு பிறகு தொடங்கும் ரஞ்சி கோப்பை தொடர்தான் இந்திய அணியின் நம்பர் 3 ஸ்பாட் யாருக்கு என்பது உறுதி செய்யும் எனலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.