பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி நிச்சயம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

புதுடெல்லி: குஜ​ராத்​தின் ரான் ஆப் கட்ச் பகு​தி​யில் உள்ள சர் கிரீக் கடல் எல்​லைப் பகு​தி​யில், பாகிஸ்​தான் அத்​து​மீறி செயல்​பட்​டால், பதிலடி கொடுக்​கப்​படும் என மத்​திய உள்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

குஜ​ராத்​தின் ரான் ஆஃப் கட்ச் பகு​தி​யில் சர் கிரீக் என்ற நீரிணைப்பு பகுதி உள்​ளது. இது இந்​தியா – பாகிஸ்​தான் இடையே கடல் எல்​லைப் போல் உள்​ளது. இப்​பகு​தி​யின் எல்​லைப் பிரச்​சினை இரு நாடு​கள் இடையே நீண்​ட​கால​மாக உள்​ளது. இப்​பிரச்​சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண இந்​தியா பல முறை முயன்​றது. ஆனால் பலன் இல்​லை.

இந்​நிலை​யில் சர் கிரீக் பகு​தி​யில் ராணுவ கட்​டமைப்​பு​களை பாகிஸ்​தான் விரிவுபடுத்​துகிறது. இது குறித்து பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கூறிய​தாவது: எல்​லைப் பகு​தி​களை இந்​திய ராணுவ​மும், எல்லை பாது​காப்பு படை​யும் (பிஎஸ்​எப்) தொடர்ந்து பாது​காத்து வரு​கிறது. சர் கிரீக் பகு​தி​யில் பாகிஸ்​தான் அத்​து​மீறி​னால், இந்​தியா பதிலடி கொடுப்​பது நிச்​ச​யம். இது வரலாறு மற்​றும் புவியமைப்பை மாற்​றியமைக்​கும். கடந்த 1965-ம் ஆண்டு போரில் இந்​திய ராணுவம் லாகூர் வரை வந்து தனது திறனை நிரூபித்​தது. சர் கிரீக் வழி​யாக கராச்சி செல்ல ஒரு வழித்​தடம் உள்​ளதை பாகிஸ்​தான் நினை​வில் கொள்ள வேண்​டும்.

ஆபரேஷன் சிந்​தூரிலும், எதிரி​களின் மறை​விடத்தை அழித்து இந்​தியா தனது திறனை வெளிப்​படுத்​தி​யது. நமது இறை​யாண்​மைக்​கு, உலகில் உள்ள எந்த சக்​தி​யும் சவால் விடுக்க முடி​யாது. தீவிர​வாத​மாக இருந்​தா​லும், வேறு எந்த பிரச்​சினை​யாக இருந்​தா​லும், அதை முறியடிக்​கும் திறன் இந்​தி​யா​வுக்கு உள்​ளது.

ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது லே விலிருந்து சர் கிரீக் வரை அத்துமீறும் பாகிஸ்​தானின் முயற்சி முறியடிக்​கப்​பட்​டது. பாகிஸ்​தானின் வான் பாது​காப்பு கருவி​களை இந்​திய ராணுவம் முற்​றி​லும் அழித்​தது. இதன் மூலம், பாகிஸ்​தான் மீது எங்​கும் எப்​போதும் தாக்​குதல் நடத்தி பாதிப்பை ஏற்​படுத்த முடி​யும் என்​பதை உலக நாடு​கள் அறிந்​தன. இந்​தி​யா​வுக்கு வலிமை இருந்​தும், போர் தொடுப்​பது நாட்​டின் நோக்​கம் அல்ல. தீவிர​வா​தி​கள் மீது மட்​டும் தாக்​குதல் நடத்​தி, நமது ராணுவம் கட்​டுப்​பாட்​டுடன் நடந்து கொண்​டது. ஆனாலும், தீவிர​வாதத்​துக்கு எதி​ரான நமது சண்​டை தொடர்​கிறது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.