பிரதமர் மோடி புத்திசாலியான தலைவர்: ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு

மாஸ்கோ: பிரதமர் நரேந்​திர மோடி சமச்​சீ​ரான மனநிலை கொண்ட புத்​தி​சாலி​யான தலை​வர் என்று ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு தெரி​வித்​தார்.

ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வதற்கு எதி​ராக இந்​தி​யப் பொருட்​கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்​துள்​ளார். இதனால் இந்​தியா – அமெரிக்கா இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டுள்​ளது.

ஐ.நா. பொதுச்​சபை கூட்​டத்​தில் அண்​மை​யில் பேசிய ட்ரம்ப், “ரஷ்​யா​விடம் இருந்து இந்​தி​யா​வும் சீனா​வும் தொடர்ந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வது, ரஷ்​யா​வின் உக்​ரைன் போருக்கு முக்​கிய நிதி ஆதா​ர​மாக உள்​ளது” என்​றும் குற்​றம் சாட்​டி​னார்.

இந்​நிலை​யில் ரஷ்​யா​வின் சோச்சி நகரில் ஒரு கலந்​துரை​யாடல் கூட்​டத்​தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசி​ய​தாவது: ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​வது முற்​றி​லும் பொருளா​தார நலனுக்​கானது. அதில் அரசி​யல் நோக்​கம் எது​வும் இல்​லை. நமது கச்சா எண்​ணெயை இந்​தியா வாங்க மறுத்​தால் அந்​நாட்​டுக்கு சில இழப்​பு​கள் ஏற்​படும்.

இந்​திய மக்​கள், அரசி​யல் தலைமை எடுக்​கும் முடிவு​களை உன்​னிப்​பாக கண்​காணிப்​பார்​கள். யாருக்கு முன்​பாக​வும் எந்த அவமானத்​தை​யும் ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டார்​கள். பிரதமர் மோடியை நான் நன்கு அறிவேன்; அவர் ஒரு​போதும் தவறான முடிவை எடுக்க மாட்​டார். அமெரிக்க வரி​வி​திப்​பால் இந்​தி​யா​வுக்கு இழப்பு ஏற்​படு​கிறது. இது, ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வதன் மூலம் ஈடு செய்​யப்​பட்டு விடும். மேலும் இறை​யாண்மை கொண்டநாடு என்ற கவுர​வத்தை இந்​தியா பெறும். இந்​தி​யா​வும் ரஷ்​யா​வும் சிறப்​புமிக்க உறவை பகிர்ந்து கொள்​கின்​றன. கடந்த காலங்களிலும் இந்​தி​யா​வுடன் நமக்கு எவ்​வித பிரச்​சினையோ,பதற்​றமோ இருந்​த​தில்​லை.

பிரதமர் மோடி எனது நம்​பிக்​கைக்​குரிய நண்​பர். அவர் சமச்​சீ​ரான மனநிலை கொண்ட புத்​தி​சாலி​யான தலை​வர். தேசநலனுக்​காக பாடு​படக்​கூடிய​வர். இந்​தி​யா​விடம் இருந்து கூடு​தலாக வேளாண் பொருட்​கள் மற்​றும் மருந்​துகளை இறக்​குமதி செய்து வர்த்​தகப் பற்​றாக்​குறையை ரஷ்யா குறைக்​கும்.

வர்த்தக கூட்​டாளி​கள் மீதான அமெரிக்​கா​வின் அதிக வரி​வி​திப்​பு, உலகளா​விய பணவீக்​கத்தை அதி​கரிக்​கும். மேலும் அமெரிக்க ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்​களை அதி​க​மாக பராமரிக்க வேண்​டிய கட்​டா​யம்​ ஏற்​படும்​. இவ்​வாறு புதின்​ பேசி​னார்​.

‘இந்திய திரைப்படங்களை மிகவும் நேசிக்கிறோம்’ – புதின் தனது உரையில் இந்திய திரைப்படங்கள் மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “ரஷ்யாவில் இந்திய திரைப்படங்கள் மீதான ஆர்வம் இன்றும் வலுவாக உள்ளது. இந்திய சினிமாவை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். இந்திய திரைப்படங்களுக்கு என தனி டிவி சேனல் வைத்திருக்கும் உலகின் ஒரே நாடாக ரஷ்யா இருக்கலாம் என கருதுகிறேன். இந்தியா – ரஷ்யா இடையிலான உறவு அரசியலை மட்டுமல்ல, கலாச்சார மற்றும் மனிதாபிமான உறவுகளையும் உள்ளடக்கியது. இந்திய மாணவர்கள் பலர் கல்விக்காக ரஷ்யா வருகின்றனர். இந்திய மக்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் ரஷ்யா வரவேற்கிறது” என்றார்.

இந்திய திரைப்படங்களை புதின் பாராட்டுவது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில், பாலிவுட் படங்கள் பற்றியும் ரஷ்யாவில் அவற்றின் பிரபலம் பற்றியும் அவர் அடிக்கடி பேசியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில், “வேறு எந்த பிரிக்ஸ் நாட்டின் திரைப்படங்களை விடவும் இந்திய படங்கள் ரஷ்யாவில் பிரபலமாக உள்ளன” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.