Rohit Sharma : இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு பெரிய ஸ்டார் பிளேயர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நீடிப்பார்களா என்ற கேள்வி ரசிகர்களிடையே விவாதப் பொருளாக உள்ள நிலையில், ஒரு மாஸ் தகவல் வெளியாகியுள்ளது. லேட்டஸ்ட் தகவலின்படி, இந்த இரண்டு சீனியர் வீரர்களும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு (ODI Series) தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், அவர்களை பிசிசிஐ தேர்வுக்குழு, ஆஸ்திரேலியா தொடருக்கு தேர்வு செய்யுமா? என்ற தகவல் நாளை வெளியாக உள்ளது.
Add Zee News as a Preferred Source
அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த்தில் ஒருநாள் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அணியைத் தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக்குழுவினர் நாளை சனிக்கிழமை மும்பையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.இந்திய அணியில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தேர்வாளர்கள் உள்ளதால் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா, கால் எலும்பு முறிவு காரணமாக ரிஷப் பன்ட் ஆகியோர் இந்த ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க மாட்டார்கள். அவர்களுக்கு மாற்றாக யார் இந்திய அணியில் இடம்பிடிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில், ஆசியக் கோப்பையில் ஆடியதுடன், மூன்று நாட்களுக்குள்ளாகவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறார். இதனால், அவர் உடல்நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதால், அவரை ஒருநாள் அல்லது டி20 தொடரில் இருந்து ஓய்வெடுக்கச் சொல்ல தேர்வாளர்கள் முடிவு செய்யக்கூடும்.
கோலி – ரோகித் இடங்கள் கேள்விக்குறி
கோலி மற்றும் ரோகித் இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இப்போது அவர்கள் ஒருநாள் போட்டிக்கு மட்டும் ஆடும் வீரர்களாக உள்ளனர். இதனால், 2027-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடக்கவிருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை வரை அவர்கள் விளையாடுவார்களா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. ரோகித் சர்மாவை பொறுத்தவரை மார்ச் மாதம் சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெற்றதில் இருந்து, ஒருநாள் அணியின் கேப்டன்சி பொறுப்பில் பெரிய தோல்விகளைச் சந்திக்கவில்லை. அவர் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினால், அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கத் தேர்வாளர்களுக்கு எந்தக் காரணமும் இல்லை. கோலி, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சதம் அடித்திருந்தார். ரோகித் ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றிக்கு உதவிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பிசிசிஐ எடுக்கப்போகும் முக்கிய முடிவு
அதனால், இருவரின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ அவசர முடிவு எடுக்காது என்றே தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு இந்திய அணிக்குச் சர்வதேச அளவில் மொத்தம் ஆறு ஒருநாள் போட்டிகள் மட்டுமே உள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று மற்றும் ஆண்டு இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவில் மூன்று போட்டிகள் உள்ளன. எனவே, இந்த இரண்டு ஸ்டார் பிளேயர்கள் குறித்தும் இப்போதே அவசரமாக எந்த முடிவும் எடுக்கப்படாது. தற்போதைய நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சொந்த மண்ணில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கும், 2025-ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கவிருக்கும் நான்கு டெஸ்ட் போட்டிகளுக்கான WTC புள்ளிகளைப் பெறுவதற்கும் தான் பிசிசிஐ அதிக முக்கியத்துவம் கொடுக்க உள்ளது. அதனால், இருவரும் ஒருநாள் போட்டியில் தொடருவார்கள்.
ஆஸ்திரேலிய தொடர் டீசர்
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான அதிகாரப்பூர்வ விளம்பர டீசரை (Official Promotional Teaser) ஒளிபரப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், கோலி மற்றும் ரோகித் ஷர்மாவின் புகைப்படங்கள் பிரதானமாக இடம்பெற்றுள்ளன. இதுவும் அவர்கள் அணியில் இருப்பது உறுதி என்பதற்கான அடையாளம் என்று நம்பப்படுகிறது.
About the Author
S.Karthikeyan