57 கேந்திர வித்யாலயா பள்ளிகள் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பொருளா​தார விவ​காரங்​களுக்​கான மத்​திய அமைச்​சரவை குழு (சிசிஇஏ) கூட்​டம் டெல்​லி​யில் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் எடுக்​கப்​பட்ட முடிவு​கள் குறித்து அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறுகை​யில், “நாட்​டின் 17 மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் புதி​தாக 57 கேந்​திர வித்​யால​யா பள்ளி​களை திறக்க சிசிஇஏ ஒப்புதல் அளித்​துள்​ளது.

இதன் மூலம் 86,000-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பயன் அடை​வார்​கள். மேலும் இதனால் 4,600-க்​கும் மேற்​பட்ட ஆசிரியர் பணியிடங்கள் உரு​வாகும். இதற்​காக 9 ஆண்​டு​களில் சுமார் ரூ.5,863 கோடி ஒதுக்​கப்​படும். இதில் ரூ.2,586 கோடி மூலதனச் செலவாகவும் ரூ.3,277 கோடி செயல்​பாட்​டுச் செல​வாகவும் இருக்​கும்” என்​றார்.

இதுகுறித்து ‘எக்​ஸ்’ தளத்​தில் பிரதமர் மோடி வெளி​யிட்​டுள்ள பதி​வில், “57 புதிய கே.​வி. பள்ளி​களை நிறுவ அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது. குழந்​தைகளுக்கு அடிப்​படை நிலை​யில் கல்வி அளிக்​கும் பால்​வ​தி​காக்​களை இது உள்​ளடக்​கி​யிருப்​பது மகிழ்ச்சி அளிக்​கிறது.

இதனால் ஏராள​மான மாணவர்​கள் பயனடை​வார்​கள், பல வேலை​வாய்ப்​பு​களும் உரு​வாகும். இவை, குறிப்​பாக லட்​சிய மாவட்டங்கள், வடகிழக்கு மற்​றும் பிற தொலை​தூரப் பகு​தி​களில், அனை​வரை​யும் உள்​ளடக்​கிய வளர்ச்​சிக்​கான எங்​கள் உறுதிப்பாட்டை உறுதி செய்​யும்​” என்​று கூறி​யுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.