பாட்னா | ரீல்ஸ் எடுக்கும்போது ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு

பாட்னா: பிஹாரில் ஜோக்​பானி – தனாபூர் இடையே அதிவேக வந்தே பாரத் ரயில் இயங்கி வரு​கிறது. இந்​நிலை​யில் பூர்​னி​யா- கஸ்பா ரயில் நிலை​யங்​களுக்கு இடை​யில் நேற்று அதி​காலை​யில் இந்த ரயில் வரும்​போது, டீன்​ஏஜ் மாணவர்​கள் 5 பேர் ரயில் பாதை​யில் நின்று ரீல்ஸ் எடுத்​துள்​ளனர்.

அப்​போது ரயில் மோதி​ய​தில் 5 பேரும் படு​கா​யம் அடைந்​தனர். ரயில்வே போலீ​ஸார் இவர்​களை மீட்டு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இந்​நிலை​யில் வழி​யில் 3 பேரும் சிகிச்சை பலனின்​றி​ ஒருவரும் உயி​ரிழந்​தனர். ஒரு​வர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். இது குறித்து ரயில்வே போலீ​ஸார் வி​சாரிக்கின்றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.