ஆசிய கோப்பை தொடர் முடிந்த நிலையில், இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த முக்கிய தொடரான ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் அதிக கவனம் பெற்று வருகிறது. அக்டோபர் 19ம் தேதி தொடங்கும் இந்த சுற்றுப்பயணத்தில், இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை கருத்தில் கொண்டு, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு என இரண்டு தனித்தனி 15 பேர் கொண்ட அணிகளை இந்திய தேர்வுக்குழு இறுதி செய்ய உள்ளது என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
Add Zee News as a Preferred Source
ஒருநாள் அணியில் யார் யார்?
சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஒரு சிறிய இடைவேளைக்கு பின், ரோஹித் சர்மா மீண்டும் ஒருநாள் அணிக்கு தலைமை ஏற்க உள்ளார். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகி, ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ள விராட் கோலியும் இந்த தொடரில் மீண்டும் களமிறங்குகிறார். மேலும் ஒருநாள் அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஐசிசி தொடர்களுக்கு தயாராகும் வகையில், இந்த ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக ரோஹித் மற்றும் விராட் கோலிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியம்.
உத்தேச இந்திய ஒருநாள் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
டி20 அணியில் யார் யார்?
டி20 அணியில் தொடர்ந்து மாற்றம் தொடர்வதால், பல புதிய முகங்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தொடர, ஷுப்மன் கில் துணை கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்ட நிதிஷ் குமார் ரெட்டி டி20 அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. மேலும் ஆசிய கோப்பையில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா மற்றும் சிவம் துபே ஆகியோர் இந்த அணியில் இடம் பெறலாம். அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி போன்ற இளைஞர்களும் இடம் பெற உள்ளனர். வரவிருக்கும் முக்கிய ஐசிசி தொடர்களை கருத்தில் கொண்டு, இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், இந்திய அணியின் சரியான பிளெயிங் 11ஐ கண்டறியவும், வீரர்களின் திறனை மதிப்பிடவும் ஒரு முக்கியமான தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச இந்திய டி20 அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சிவம் துபே, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி, வருண் சக்கரவர்த்தி
About the Author
RK Spark