முடிவுக்கு வந்தது ரோஹித் காலம்… இனி கில் தான் கேப்டன் – ஓடிஐ அணி அறிவிப்பு!

India vs Australia ODI Squad Announcement: அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்திய ஆடவர் சீனியர் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. 3 ஓடிஐ மற்றும் 5 டி20ஐ போட்டிகளில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கின்றன.

Add Zee News as a Preferred Source

India vs Australia: ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்

ஓடிஐ தொடர் அக். 19ஆம் தேதி தொடங்கி, அக். 25ஆம் தேதிவரை நடக்கிறது. தொடர்ந்து, டி20ஐ தொடர் அக். 29ஆம் தேதி தொடங்கி நவ. 8ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்நிலையில், ஓடிஐ மற்றும் டி20ஐ தொடருக்கான இந்தியா ஸ்குவாட் இன்று பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டுள்ளது.

India vs Australia: முடிவுக்கு வந்தது ரோஹித்தின் காலம்

ஓடிஐ அணியை பொருத்தவரை, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளனர். அதேநேரத்தில், கேப்டன்ஸி பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா விடுவிக்கப்பட்டு, அப்பொறுப்பு சுப்மான் கில்லிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்கெனவே டெஸ்ட் கேப்டன்ஸியும் ரோஹித் சர்மா ஓய்வுக்கு பின் சுப்மான் கில்லுக்கே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

India vs Australia: சுப்மான் கில் கேப்டனானது ஏன்?

மேலும், கேப்டன்ஸி மாற்றம்  குறித்து ரோஹித் சர்மாவிடம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தினோம் என அகர்கர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 2027 உலகக் கோப்பையை கருத்தில்கொண்டு கேப்டன்ஸி மாற்றம் நடைபெற்றுள்ளதாக கூறினார். மேலும் அவர், “அடுத்து என்ன வருகிறது? அணியின் நலனுக்கு எது சரியானது?என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். மற்றவருக்கு (கில்) ஒரு நல்ல வாய்ப்பை வழங்குவதற்கு நீங்கள் முன்கூட்டியே அதுகுறித்து முடிவெடுத்து, முயற்சித்து பார்க்க வேண்டும்” என்றார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு பார்மட்டுக்கும் ஒவ்வொரு வீரரை கேப்டனாக வைத்திருப்பது எளிதானதில்லை என்றும் அகர்கர் கூறியிருந்தார்.

India vs Australia: ஷ்ரேயாஸ் துணை கேப்டன்

ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஓடிஐ கேப்டன்ஸி பொறுப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முதன்மை விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் செயல்படுவார். வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த துருவ் ஜுரேல் பேக்அப் விக்கெட் கீப்பராக செயல்படுவார். ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர்தான் பிரதான ஓபனிங் ஜோடி என்ற நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேக்அப் ஓபனராக இருப்பார்.

India vs Australia: ஆல்ரவுண்டர்கள் யார் யாருக்கு வாய்ப்பு?

தொடர்ந்து ஆல்-ரவுண்டர்களாக அக்சர் பட்டேல், நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் இன்னும் உடற்தகுதி பெறவில்லை. அதனால் அவருக்கு ஓடிஐ மட்டுமின்றி டி20ஐ தொடரிலும் வாய்ப்பளிக்கப்படவில்லை. தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன் அவர் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிஷ்குமார் மற்றும் துருவ் ஜுரேல் இதுவரை ஓடிஐ-ல் அறிமுகமாகவில்லை.

India vs Australia: ஜடேஜா இல்லை ஏன்?

அதேநேரத்தில் மற்றொரு அனுபவ ஆல்-ரவுண்டரான ஜடேஜா ஸ்குவாடில் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலியாவில் இரண்டு சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டருக்கு மேல் கூடுதலாக ஒருவர் தேவையில்லை என்பதால் ஜடேஜா விடுபட்டுள்ளார் என்றும் இருப்பினும் அவர் தொடர்ந்து எங்களது கவனத்தில் இருப்பார் என்றும் அகர்கர்  தெரிவித்துள்ளார்.

India vs Australia: பும்ரா, வருண் கிடையாது

மேலும் ஓடிஐ ஸ்குவாடில் குல்தீப் யாதவ் மட்டுமே பிரீமியம் ஸ்பின்னர் ஆவார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றிருந்தாலும், அது ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடந்ததால் அவரின் தேர்வு நியாயமானதாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் வருணையும் சேர்த்து விளையாட இயலாது என்பதால் அவர் நீக்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சை பொருத்தவரை ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பும்ரா ஓடிஐ அணியில் இடம்பெறவில்லை. வேலைப்பளூ காரணமாக அவர் ஓடிஐ அணியில் இடம்பறவில்லை. 

India vs Australia: இந்திய ஓடிஐ ஸ்குவாட்

சுப்மான் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால். 

 India’s squad for Tour of Australia announced

Shubman Gill named #TeamIndia Captain for ODIs

The #AUSvIND bilateral series comprises three ODIs and five T20Is against Australia in October-November pic.twitter.com/l3I2LA1dBJ

— BCCI (@BCCI) October 4, 2025

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.