முதியவரிடம் செல்போன் திருடி ரூ.1.95 லட்சம் மோசடி: ஹைதராபாத்தில் 3 பேர் கைது

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்தை சேர்ந்த 68 வயது முதி​ய​வர் ஒரு​வர், கடந்த செப்​.17-ம் தேதி உப்​பல் பகு​தி​யில் இருந்து தார்​நாகா எனும் ஊருக்கு ஷேர் ஆட்​டோ​வில் பயணம் செய்​துள்​ளார். அதற்கு, செல்​போன் மூலம் ஆட்டோ ஓட்​டுநர் முகமது மொயின் உத்​தீனுக்கு பணம் அனுப்​பி​னார்.

அப்​போது அதே ஆட்​டோ​வில் பயணம் செய்த ஆட்டோ ஓட்​டுநரின் நண்​ப​ரான முகமது சையது சல்​மான் என்​கிற சுல்​தான், முதி​ய​வர் பணம் அனுப்​பும்​போது, ரகசிய குறி​யீட்டு எண்ணை பார்த்​துள்​ளார். பிறகு அந்த முதி​ய​வரை திசை திருப்பி செல்​போனை​யும் திருடி விட்​டார். பின்னர், முதியவரின் வங்​கிக் கணக்​கில் இருந்து ரூ.1.95 லட்​சத்தை தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றிக்கொண்டனர்.

இது தொடர்​பான புகாரில் ஹைத​ரா​பாத் சைபர் கிரைம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். ஆட்டோ ஓட்​டுநர் முகமது மொயின் உத்​தீனை பிடித்து விசா​ரணை நடத்​தி​ய​தில் நடந்த உண்​மை​கள் வெளிவந்​தன. முதி​ய​வரின் செல்​போன் மூலம் பெட்​ரோல் பங்க், கடைகள், என பல இடங்​களில் ஸ்கேன் செய்​து, பணத்தை பெற்​றுள்​ளனர்.

மேலும், செல்​போனில் ரம்மி விளை​யாடு​பவர்​களிடம் இருந்து பணம் பெற்​றுக்​கொண்​டு, அவர்​களின் வங்​கிக் கணக்​கிற்கு அந்த தொகையை அனுப்பி உள்​ளனர். இந்த மோசடி தொடர்பாக 3 பேரை போலீ​ஸார் கைது செய்து வி​சா​ரிக்கின்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.