Whatsapp -இல் கூட இல்லாத 7 அம்சங்கள் அரட்டை செயலியில்…. அரட்டை அடிக்கலாமா?

Arattai App Latest News: சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜோஹோ கார்ப்பரேஷனின் உள்நாட்டு செய்தியிடல் செயலியான அரட்டை, தற்போது சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது. இது மெட்டாவின் வாட்ஸ்அப்பிற்கு இந்தியாவின் பதில் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இது இதுவரை எந்த உலகளாவிய செய்தியிடல் செயலியிலும் கிடைக்காத ஒரு அம்சத்தைக் கொண்டுள்ளது: ஆண்ட்ராய்டு டிவிக்கான அதிகாரப்பூர்வ பயன்பாட்டு ஆதரவு.

Add Zee News as a Preferred Source

ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலி பல வழிகளில் வாட்ஸ்ஆப்பை விட மேம்பட்டுள்ளது. அரட்டை செயலி தனது ஆரம்ப நிலையில் உள்ளது. இதில் இன்னும் அதிக மேம்படுத்தல்கள் வரவுள்ள நிலையில், எதிர்காலத்தில் இது WhatsApp -க்கு கடுமையான போட்டியை கொடுக்கும் என சொல்லப்படுகின்றது.

Arattai Vs WhatsApp

அரட்டை செயலியில் உள்ள, வேறு எந்த செய்தியிடல் செயலியிலும் கிடைக்காத 5 சிறப்பம்சங்களை பற்றி இங்கே காணலாம்  

Android TV: ஆண்ட்ராய்டு டிவியில் முதல் செய்தியிடல் செயலி

இதுவரை, WhatsApp, Telegram, Signal, WeChat, Line அல்லது KakaoTalk என எந்த செய்தியிடல் செயலியிலும் அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு டிவி வர்ஷன் இல்லை. பயனர்கள் செய்தி அனுப்புவதற்கு தற்காலிக முறைகளை நாட வேண்டியிருந்தது. ஆனால் அரட்டை செயலி இந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வை வழங்கியுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு டிவி செயலி கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. மேலும் இதை எளிதாக நிறுவ முடியும்.

Pocket: பாக்கெட்

பலர் வாட்ஸ்அப்பில் சில செய்திகளை சேமிக்க தங்களுக்கே அவற்றை அனுப்பிக்கொள்வது வழக்கம். அரட்டை செயலி இதற்காக ஒரு கிளவுட் ஸ்டோரேஜ் அம்சத்தை கொடுத்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட அம்சத்திற்கு ‘பாக்கெட்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் டெக்ஸ்ட், மீடியா மற்றும் லிங்குகளை சேமிக்க முடியும்.

Multi Device Support: மல்டி டிவைஸ் ஆதரவு

மல்டி டிவைஸ் ஆதரவை வழங்கி, வாட்ஸ்அப்பை விட இந்த அம்சத்தில் அரட்டை செயலி முன்னணியில் உள்ளது. இது ஸ்மார்ட்போன்களில் மட்டுமல்ல, Linux, macOS மற்றும் Windows -இலும் கிடைக்கிறது. அதாவது பயனர்கள் பல சாதனங்களில் ஒரே கணக்கை இயக்க முடியும். ஆண்ட்ராய்டு டிவி ஆதரவுடன், அதன் பயன்பாடு இன்னும் அதிகரித்துள்ளது.

Meetings Feature: மீடிங்ஸ் ஃபீச்சர்

வாட்ஸ்அப்பின் வீடியோ அழைப்பு திறன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரட்டை செயலியில் Google Meet மற்றும் Zoom -இல் உள்ளது போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அரட்டை செயலிக்குள்ளேயே பயனர்கள் உடனடி சந்திப்புகளை (instant meeting) உருவாக்கலாம், மீடிங்கில் ஜாயின் செய்யலாம் அல்லது ஷெட்யூல் செய்யலாம்.

Mentions: மென்ஷன்ஸ்

வாட்ஸ்அப்பில் நோடிஃபிகேஷன்களை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம், ஆனால் அரட்டை செயலியில் Slack போன்ற மென்ஷன் டேப்புகள் உள்ளன. இதன் மூலம் எந்த செய்திகளில் நீங்கள் டேக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

No Ad Policy: விளம்பரங்கள் இல்லா கொள்கை

விளம்பரத்திற்காக பயனர் தரவு பயன்படுத்தப்படாது என்று அரட்டை தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், இப்போது வாட்ஸ்அப் ‘Updates’ டேபில் விளம்பரங்கள் தெரியத் தொடங்கியுள்ளன. மேலும் வாட்ஸ்அப் மெட்டாவுடன் தரவையும் பகிர்ந்து கொள்கிறது.

AI Feature: AI அம்சம்

AI அம்சங்கள் வாட்ஸ்அப்பில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றை முடக்குவதற்கான ஆப்ஷனும் அதில் கொடுக்கப்படவில்லை. ஆனால், அரட்டை செயலியில் தேவையற்ற AI இடைமுகம் இல்லை, இது பயனர்களுக்கு சுத்தமான மற்றும் எளிமையான அனுபவத்தை வழங்குகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த செயலி “வாட்ஸ்அப் கில்லர்” என்று விரைவாக பிரபலமடைந்து வருகிறது. அரட்டை செயலி பாதுகாப்பான மற்றும் விளம்பரமில்லா அனுபவத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அதன் ஆண்ட்ராய்டு டிவி ஆதரவும் புதுமையான அம்சங்களும் ஏற்கனவே உள்ள அரட்டை செயலிகளை விட அதை ஒரு படி மேலே உயர்த்துகின்றன.

About the Author


Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.