அரசுத் துறை​களில் மாற்றுத் திறனாளிகள் பணியிடங்கள் குறைக்கப்படவில்லை

சென்னை: அரசுத் துறை​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான பணி​யிடங்​கள் 235-ல் இருந்து 119 ஆக குறைக்​கவில்லை என்று மாற்​றுத் திற​னாளி​கள் நலத்​துறை விளக்​கம் அளித்​துள்​ளது.

அரசு பணி​களில் மாற்​றுத்திற​னாளி​களுக்கு ஏற்ற வகை​யில் 119 பணி​யிடங்​கள் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ள​தாக தமிழக அரசு அரசாணை கடந்த மாதம் 26-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. அதில் மாற்​றுத்​திற​னாளி​கள் மேற்​கொள்​ளும் சவால்​களை கருத்​தில் கொண்​டு, அவர்​களின் தகு​திக்கு ஏற்ற பதவி​கள் என்ன என்ற விவரங்​களை​யும் தமிழக அரசு அறி​வித்​துள்​ளது. அதாவது மாற்​றுத்​திற​னாளி​களுக்கு ஏற்ற 119 பணி​களை நிபுணர் குழு மூலம் தேர்வு செய்ய உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. அதில் 4 நிலைகளுக்கு ஏற்ப ஏ, பி, சி, டி என்ற பிரி​வில், 119 பதவி​களும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு வழங்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடை​யில், மாற்​றுத் திற​னாளி​கள் நலச்​சங்​கம் இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்​டது. தற்​போது, 119 இடங்​களே மாற்​றுத் திற​னாளி​கள் செய்ய ஏற்ற பணி​களாக சரி​பா​தி​யாக குறைத்து திமுக அரசு துரோகம் இழைத்​துள்​ளதாக அதில் தெரி​விக்கப்பட்டிருந்​தது. இந்​நிலை​யில், அரசு துறை​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான பணி​யிடங்​கள் குறைக்​கப்​பட​வில்லை என்று மாற்​றுத் திற​னாளி​கள் நலத்​துறை விளக்​கம் அளித்​துள்​ளது.

இதுகுறித்​து,நலத்​துறை சார்பில் வெளி​யிட்ட அறிக்​கை​: அரசுத் துறை​களில் மாற்​றுத்திற​னாளி​கள் பணிபுரிய அரசாணை எண், 20-க்கு முன் கண்​டறியப்​பட்ட பணி​யிடங்​கள், எந்த வகை​யிலும் குறைக்​கப்​பட​வில்​லை. நேரடி நியமனங்​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு உகந்​தது என கண்​டறியப்​படும் பணி​யிடங்​களை பதவி உயர்​வுக்கு ஏற்ற பணி​யிடங்​களாக கருத, துறை​யின் பணி​சார் விதி​களை நிபுணர் குழு ஆய்வு செய்ய வேண்​டி​யுள்​ளது. இம்​முறை​யில் பதவி உயர்​வில் 4 சதவீத இடஒதுக்​கீட்டை செயல்​படுத்​தும்​போது, தொடர்​புடைய துறை​யில் உள்ள அனைத்து பணி​யிடங்​களும் நிபுணர் குழு​வால் பரிசீலனை செய்​யப்​பட்​டு,
பதவி உயர்​வுக்​கான உகந்த பணி​யிடங்​கள் கண்​டறிப்​பட்டு அரசாணை வெளி​யிடப்​படும். எனவே, மாற்​றுத் திற​னாளி​களுக்​கான பணி​யிடங்​கள் எந்த வகை​யிலும் குறைக்​கப்​பட​வில்​லை. இவ்​வாறு கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.