திருமலை: திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று முன்தினம் பக்தர்களிடம் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அணில்குமார் தொலைபேசி மூலம் குறைகளை கேட்டறியும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, 23 பக்தர்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து தொலைபேசி மூலம் தங்களது குறைகளை நிர்வாக அதிகாரிக்கு எடுத்துரைத்தனர். அப்போது கடப்பாவிலிருந்து ஸ்ரீநிவாசுலு எனும் பக்தர் “ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்டுகளை மட்டும் தனியாக ஒரு நாளில் வழங்கப்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.
திருப்பூரில் இருந்து நாகேஸ்வர ராவ் எனும் பக்தர் “கோயிலுக்குள் சில தேவஸ்தான ஊழியர்கள் தரக்குறைவாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என பேசினார்.